கொசு

புதினம் பத்திரிகைக்கு ஒரு சிறுகதையை எழுதி அனுப்பும் படி மூன்று முறை ஆசிரியர் எனக்குப் போன் செய்திருப்பார். மூட் இருந்தால் தானே நான் எழுத முடியும்?. கம்பூட்டருக்கு முன் நான் போய் அமர்ந்தேன். என்னிலையை கண்டோ என்னவோ என் மனைவி சூடான ஆட்டுப் பால் கலந்த காப்பியைக் கொன்டுவந்து மேசையில்வைத்தாள். அதை எடுத்து ஒரு தடவை சுவைத்துவிட்டு என் சிந்ததனையை ஓடவிட்டேன். அந்த சமயம் எங்கிருந்தோ ரீங்காரம் இட்டவரேஎன், என் தலையை சில தடவை சுற்றி எனக்கு எரிச்சலைக் கொடுத்தபின் எனது காப்பியில் என்னோடு பங்கு கொள்ளளும் நோக்கத்தோடு கோப்பையின் விளிம்பில் அமர்ந்தது.
கொசுஎன்றலே எனக்குப் பயம். நான் தூங்கும் போது கொசுவின் தாக்குதலில் இருந்துஎன்னைக் காப்ற்ற கொசு வலைக்குள் படுப்பேன். என் பரிசுத்தமான இரத்தத்தை சுவைக்க முடியாததால் சந்தர்ப்பம் பார்த்து இப்பொது வந்திருகிறது இந்தபொல்லாதகொசு.
“சீ சனியனே போ” எஎன்று கைகளால் துரத்தினேன். அது உன்னைவிட்டேனோபார் என்று திரும்பவும் பறந்து வந்து என் மூக்கில் வந்து அமர்ந்தது. எனக்கு முக்குக்கு மேல்கோபம் வந்தது.. மெதுவாகமூக்கைத்தொட்டேன். அது இடம்மாறி பறந்து வந்து
என் கைகளில் அமர்ந்தது. எங்களுக்கிடையே போர் தொடர்ந்தது என் சிந்தனை களைந்தது.எனக்கு கொசுமேல் வந்த கோபம் மனவி மேல் மாறியது.
“ இதுகுத்தான் நான் பல தடவைசொன்னான் தோட்டத்தில் உள்ள குட்டையில் நீர் தேங்க விடவேண்டாம் என்று நீர் கேட்கவில்லை. குட்டையில்உள்ள நீரில் முட்டை போட்டு குஞ்சுபொரித்துபெரிய குடும்பம் நடத்தி இருக்கு கொசுக்கள் அந்த குடும்பம்ஒன்றில் வந்தது தான் இந்த கொசு
இது. என்னை ஏல எழுத விட்டாமல் என்இரத்தத்தை உறிஞ்ச வந்து தொந்தரவு செய்கிறது. “ சத்தம்போட்டு மனைவிக்குசொன்னேன்.
“ நான் என்ன செய்ய? உங்கடை அருமைமகள் ராதாவுக்கு பலதடவை குட்டையிலை நீர் தங்க விடாதே என்று சொன்னான்,அதுக்கு அவள் தோட்டத்துக்கு வரும் ரொபின் குருவிக்கும், அணில், முய்ல் தானியம் சாபிடபின் தாகம் தீர்க்க அந்த குட்டைநீர் மட்டும் தான உண்டு” என்று காரணம் அவள் காட்டினாள். நான் என்ன செய்ய? “ என்றாள் என் மனைவி.
“ உமக்கு தெரியுமா இந்த பொல்லாத கொசு கடித்தால் என்ன வருத்தம் வருமெண்டு”?நான் சொன்னேன்.
நான் சொன்னது கொசுவுக்கு கேட்டதோ எனவோ, ஊசி போன்ற தன்வாயினால்என் இரத்தத்தை கையில் சுவைத்து விட்டு, தன உணவைமுடித்துக்கு கொண்டு பறந்து போய் சுவரில்அமர்ந்தது. கொசுவுக்கோ அதன் வயிறு நிரம்பியதால் பெரும் சந்தோஷம். தான் என்னை போரில்வென்று விட்டதாக ஒருபுறம்மகிழ்ச்சி..
இதையெல்லாம். சுவரில் இருந்த பல்லிஅமைதியாகபார்த்துகொண்டு இருந்தது.
கொசுதன் அருகில் வந்திருந்தது மகிழ்ச்சி பல்லிக்கு. தாமதிக்காமல் உடனே தன நாக்கை நீட்டி அப்படியே லபக் என்று கொசுவை விழுங்கியது.
அக்காட்சியை பார்த்தும் எ எனக்கோ ஒரே சந்தோஷம். அப்பாடி கொசு தொலை இனி இல்லை. நிம்மதியாக இனி எழுதலாம் என்ற, நடந்த சம்பவத்தை கருவாக வைத்து ஒரு சிறு கதை என் கற்பனைக்கு உதயமானது. புதினம் பத்திரிகை ஆசிரியருக்கு கதையை மின் அஞ்சல் மூலம்அனுப்பிவிட்டு மிகுதி இருந்த கோப்பியைக் குடித்து முடித்தேன்,
நாட்கள் சில சென்றன. ஒருநாள் எனக்கு நடுக்கத்தோடு காச்சல் வந்தது. மனைவி தந்த பனடோல் குளிசையை விழுங்கினேன். காச்சலும் நடுகமும் போனதாக இல்லை. என்னை என்மனைவி குடும்ப டாக்டரிடம் அழைத்து சென்றாள். டாக்டர்பரிசோதித்து விட்டு சொன்னார் “
“உமக்கு மலேரியா காச்சல் வந்திருக்கு. இந்த கைப்பு மருந்தை தினம் முன்று தடவை குடியும்” என்றார் மருந்தைத் தந்த டாக்டர்.
நான் மனதுக்குள் கொசுவை திட்டிக்கொண்டு கிளினிக்கை விட்டுவெளியேறினேன்.
*******

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (8-Apr-17, 7:05 am)
Tanglish : kosu
பார்வை : 248

மேலே