கத்தாருக்கு போடி

ஏண்டி சிவகாமி நீ போடவ கட்டிருக்கற லட்சணத்தைப் பாரு. "தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"
அந்த சிவபெருமானை நாள் தோறும் போற்றி வணங்கற இந்தப் புண்ணியத்தலத்துக்கு இப்பிடியா அலங்கோலமா பொடவ கட்டிட்டு வர்றது?
@@@@@|
பாட்டிம்மா என்னோட அபிமான இதயதெய்வங்களான சினிமா நடிகைங்க எப்பிடி பொடவ கட்டறாங்களோ, அது மாதிரிதான் நானும் கட்டுவேன்.
@@##@@@@#
சிவ, சிவா! இந்ந சினிமா பையத்தியத்தை எப்படி திருத்தறது.
@@@@@
பாட்டிம்மா, நான் பைத்தியம் இல்லை. நீங்கதான் பைத்தியம். நம்ம நாட்டில எப்படி.வேண்டுமானாலும் ஆடை உடுத்தலாம். சட்டம் தடை போடல. மாட்டிறைச்சிக்கு எதிராத்தான் சில வட மாநிலங்கள்ல தடை. இந்து மதத்தைப் பத்தியோ, இந்துக் கடவுள்களப் பத்தியோ இழிவா பேசினாத்தான் குற்றம். மாடுகளை ஒரு ஆளு லாரி ஏத்துனாராம் ஒரு ஆளு. அந்தப் பகுதில இருந்த 'பசு காவலர்கள்' என்ற அமைப்பைச் சேர்ந்த ஆளுங்க லாரில மாடு ஏத்துன ஆள இழுத்துப்போட்டு பாதைல போற மக்கள் கண்ணு முன்னாடியே அடிச்சு கொன்னுட்டாங்க. நல்லவேளை அந்த மாதிரி காட்டுமிராண்டிங்க நம்ம தமிழ் நாட்டில இல்ல பாட்டிம்மா.
@@@@@@
அடியே சிவகாமி, எனக்கு அந்தக் கதையெல்லாம் நீ சொல்ல வேண்டாம். உன்னத் திருத்தணும்ன்னா உன்ன கத்தாருக்கு புடுச்சு அனுப்பிவைக்கணும். அங்க அரைகுறை ஆடைக்குத் தடையாம்.
அங்க போயி நீ இதுமாதிரி அரைகுறை வேலை செஞ்சா பொது எடத்தில நிக்க வச்சு நூறு சவுக்கடி குடுத்து நம்ம நாட்டுக்கு தொரத்திவிடுவாங்க.
@@@@@
ஏம் பாட்டிம்மா உங்களுக்கு இவ்வளவு கெட்ட எண்ணம்?

எழுதியவர் : மலர் (8-Apr-17, 12:48 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 227

மேலே