தலைவர் வாழ்க

இன்று என்னுடைய முதல் நாள் . புது வேலை , புது நண்பர்கள் எல்லாம் யோசிக்கும்போது ஒரு பயம் இருந்தாலும் என்னுடைய கனவு நிறைவேறியதாய் ஒரு சந்தோசம்.தனியார் நிறுவனம் தான் என்றாலும் அங்கு வேலை கிடைத்தால் வாழ்க்கையே மாறிடும்.

பேருந்து தனது பயணம் ஆரம்பித்ததை கூட தெரியாமல் புது வேலையை பற்றின கனவில் மூழ்கி இருந்தேன் . ஒரு தடவை கூட பையில் இருந்த சான்றிதழ்களை சரி பார்த்தேன் .

"எத்தனாவது அழைப்புபா நான் வந்திட்டுருக்கேன்." என்ற குரலை கேட்டு விழித்து பார்த்தேன் . பக்கத்தில் ஒருவர் உக்காந்துட்டு கை பேசியில் பேசி கொண்டுருந்தார் . என்னை பார்த்ததும் எதோ பல நாள் பழக்கம் போல் பேச ஆரம்பித்தார் .
என் பய்யன் சும்மா கால் பண்ணி எங்க இருக்க அப்பானு கேட்டிட்டே இருக்கான் . ரொம்ப நாளா பாக் கேட்டுட்டு இருந்தான் . இன்னைக்கு தான் முதலாளி காசு கொடுத்தாரு . கடன் தான் . அட! பயனுக்கு அப்பா நான் தானே வாங்கி கொடுக்கணும் .என்று பேசிக்கிட்டே போனார் . அவரை பார்க்கும்போது என் அப்பாவை நியாபகம் வந்தது . எதையும் நான் கேக்காமலே வாங்கி கொடுத்திருவார் . இனி அவரை கஷ்டப்படுத்த கூடாதுனு மனதில் நினைத்து கொண்டேன் .

திடிரென்று பேருந்து நின்றது . ஒரு கும்பல் உருட்டு கட்டை , மற்றும் அருவளோடு பேருந்தை மறித்து நின்று கொண்டிருந்தனர் . அதில் ஒருவன் " என் தலைவருக்கு செருப்பு மாலை போட்டிருக்காங்க அதனால எந்த ஒரு வண்டியும் ஓடாது என்று " கத்தினான் . மற்றவர்கள் பேருந்தின் உள்ளே நுழைந்தனர் அனைவரையும் மிரட்டி கீழே இறக்கினார்கள் . அதில் ஒருவன் என் சட்டையை பிடித்து கீழே தள்ளினான். என்னுடைய பை பேருந்தில் கீழே விழுந்து சான்றிதழ்கள் சிதறின.

ஒருவன் பேருந்தின் மீது பெட்ரோலை ஊற்ற ஆரம்பித்தான் . என் பக்கத்தில் உட்க்காந்திருந்தவர் அழுது கொண்டே சொன்னார் " என் பய்யன் பாக்க்குக்காக காத்துட்டிருக்கன் நான் என்ன சொல்ல போறேன்னு தெரியலையே கடவுளே ? இப்படி அநியாயம் பன்றாங்களே. " அந்த வார்த்தைகள் என்னக்கு எதோ ஒரு வேகத்தை தந்தது . முன்னில் நின்று கொண்டிருந்த அனைவரையும் தள்ளி விட்டு பேருந்தின் உள்ளே ஓடினேன் . நான் இருந்த இருக்கையின் கீழ் அந்த பாக் கிடந்தது அதை எடுத்து கொண்டு பேருந்தின் படி கட்டை நெருங்கியதும் திரும்பி பார்த்தேன் புது வேலையின் நியமன கடிதம் (appointment letter) கீழே மிதிபட்டு கிடக்கிறது.

பேருந்து தீயில் கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது , சட்டென்று கீழே இறங்கி கண்ணீரோடு நின்றவரிடம் கொடுத்ததும் மனதில் எதோ ஒரு சந்தோசம் தோன்றியது . பேருந்து புகை விட்டு எரிகின்றது என் கனவும் சேர்ந்தே எரிகிறது , அந்த தீயில் அப்பாவின் முகம் வந்து போனது ஆனால் ஓரத்தில் பாக் வைத்து கொண்டு சிரிக்கும் ஒரு முகம் தெரியாத சிறுவனின் நிழல் தெரிந்தது.

அப்போது அங்கு "தலைவர் வாழ்க" என்ற குரல் ஒலித்து கொண்டிருந்தது .

எழுதியவர் : (8-Apr-17, 1:43 pm)
சேர்த்தது : Sarah14
Tanglish : thalaivar vazhga
பார்வை : 174

மேலே