சாத்து --யாரை

சாத்து, சாத்து!
😊😊😊😊😊😊😊
பாட்டி இந்த வயசான காலத்தில யார சாத்தச் சொல்லறீங்க? யாராவது உங்கள சாத்துனா பரலோகம் நிச்சயமா உண்டு.
😊😊😊😊😊😊😊
போடா கூரு கெட்ட கருவாப் பயலே.என்ன எவன்டா சாத்தறவன். மூஞ்சியப் பிச்சு எறிஞ்சிடுவேன் சாக்கிரதை.
😊😊😊😊😊
நான் என்னத்த சொல்லிட்டேன். காடு 'வா, வா' -ங்கற வயசில பொல்லாத கோவம். சாத்துன்னு எதுக்கு சொன்னீங்க? உங்களையா வேற யாரையாவதையும் சாத்தனுமா?.
😊😊😊😊😊
பெங்களூரிலிருந்து வந்திருக்கற எம் பேரம் பேரு :சாத்து' -டா அண்டங் காக்காப் பயலே.
😊😊😊😊😊😊
ஓ....அது இந்தி சாத்தா? நா தமிழ். சாத்து-ன்னு நேனச்சிட்டட்ன் பாட்டிம்மா.
😊😊😊😊😊😊
தறுதலை தங்கமாரி. எம் மவன் பெரிய படிப்பு படிச்சவன்டா. அர்த்தமான இந்திப் பேரத்தான்டா வச்சிருக்கறான் எம் பேரனுக்கு. சாத்துன்னா 'வெற்றிகரமா செய்து முடி; வெற்றி கொள்' -ன்னு அர்த்தமடா கூமட்டப் பயலே.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Saadh = accomplish
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (9-Apr-17, 1:40 am)
பார்வை : 330

மேலே