நிலவின் சொர்ப்பணம்

நிலவின் சொர்ப்பணம்...

வாண் மதி விஞ்சும் மதிமுகம் காண
வானத்து நிலவும் வையகம் வந்தது
வனப்பில் மதியும் மயங்கி
வடித்த கவி என்னவோ?

ஆயிரம் பௌர்ணமி ஒளிசமைத்த
அவள் பூவிழி அழகில் நிலா மிரளும்
சூரிய சுடரிவள் நெற்றிச்சுட்டிக்குள்
சூனியமாய் கரைந்ததோ!
விடிவெள்ளி ஒளியெல்லாம்
அட அவள் திலகமதோ!
வானவில் ஓடிவந்து ஒட்டிக்கொண்ட புருவங்களோ!
வால்வெள்ளி உருகியமூக்கில் புதன்கீற்றிலொரு மூக்குத்தி!
பிறைநிலவின் குறைசெதுக்கி
நிறை கண்ட செவ்வாயோ!
விண்பூக்கள் நாவெட்டாய் பற்களில்
மின்தெறித்த புன்னகையோ...
வெண்மேகபஞ்செடுத்து செய்து வைத்த கன்னங்களோ.!
சனிவளையம் பிறையுடைத்த இருவளை
கன்னியவள் காதணிகளோ! காரிருள் வண்ணத்தில் காரிகையின் கார்குழலோ!
வளியருவி வளைத்தெடுத்த கழுத்தழகோ!
வெண்மஞ்சு மலையாகியிரு அங்கமானதோ!
தகதக தங்கசூரிய நிறத்திலே சிலைவடித்த மாதுளையோ?
அலைகளின் நுரைநெய்த ஆடையழகோ அதுகொள்ளை
கலை பயிற்றுமவள் நளின நடைசொல்லும் முத்தமிழ்..
பயந்தெழுந்து விழிவிரித்து வியந்தசொர்ப்பணமோ!!!!

எழுதியவர் : S.Jeyarani (10-Apr-17, 4:38 pm)
பார்வை : 138

மேலே