நல்லா இருக்குதே உங்க நியாயம்

தமிழ்நாட்டில் பெண் கொடுத்து, பெண் எடுத்து வாழும் இரண்டு ஊர்களுக்கிடையே ஒரு ஊர்க்காரர்கள் அடுத்த ஊருக்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள் வறண்ட மனதோடு...
இந்நிலையில் நதி நீர் இணைப்பு கோருகிறோம், அது தான் சாத்தியமா??...

இரு ஊர்களுக்கிடையே பகைமையே இல்லை என்றாலும் தண்ணீர் தர மறுக்கிறது அன்பற்ற மனநிலையோடு...
சுற்றிச் சுற்றி வம்பிழுத்து பகைமை ஏற்படுத்தி இருக்கிறாயே மனிதா,
இங்கே மாநிலங்களும் ஒன்றுபடுமா???..
அரசியல் இராஜதந்திரிகள் தான் இணையவிட்டு விடுவார்களா???.

அரசாங்கத்தை நம்பி எத்தனை நாட்களுக்கு வாழ்த்துவிடுவீர்கள்???.
அரசாங்கம் என்றாலே தட்டிக் கழிக்கும் வேலையை தானே சரியாக செய்யும்..

எனது ஊரில் உள்ள வளங்களை எல்லாம் அழித்துவிட்டு பக்கத்தூரில் கையேந்தி பிழைப்பதைவிட ஒரு மோசமான இழிவு நிலையுண்டா??..

நெல் விளைய வேண்டிய இடத்தில் நெல் தான் பயிரிட வேண்டுமென்றே சொன்னால் மட்டும் அது தனது இஷ்டமென்று கூறியவர்கள் இன்று நஷ்டத்தை மட்டும் தனது இஷ்டமென்று ஏற்க மறுப்பதென்ன???..

அரசாங்கத்திற்கு எந்த சேவையையும் சரியாகச் செய்ய மாட்டோம். ஆனால், எங்களுக்கு நஷ்டம் வந்தால் அரசாங்கமே பொறுப்பு..
நல்ல இருக்குதே உங்க நியாயம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Apr-17, 7:15 am)
பார்வை : 1095

மேலே