மழையே நீ வாருமைய்யா

நெல் விளைந்த பூமியய்யா இது
நீரில்லாமல் வாடுதய்யா
வாழ வைத்த மண்ணும் இப்போ
வறண்டு போய் இருக்குதய்யா

சொட்டுத் தண்ணீர் இல்லாமல்
பச்சைப் பயிரு அழுவுதய்யா
சோகம் எல்லாம் சேர்ந்து வந்து
எங்கள் வாழ்க்கையையே ஆட்டுதய்யா

ஏரி குளம் வத்திப் போச்சு
பாதி சொந்தம் செத்துப் போச்சு
எங்கள் சோகக்கதையைக் கேட்பதற்கு
யாரும் இங்கு இல்லையய்யா

உலகப்பசியைத் தீர்த்து வைத்தோம் இப்போ
எங்கப்பசியை யார் அறிவார்?
தண்ணீர் இல்லாமல் தவிக்கிறோம் எங்கக்
கண்ணீரைத் துடைக்க யார் வருவார்?

மழையே நீ வாருமைய்யா
எங்கள் சோகம் தீர்க்க வாருமைய்யா
பட்டினியால் கிடந்து தவிக்கும் மக்கள்
பசித் தீர்க்க வாருமைய்யா

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (11-Apr-17, 6:47 pm)
பார்வை : 1736

மேலே