மனமே நீ ஏங்காதே

மனமே!
நீ ஏங்காதே!!
எதுவும் இங்கே யாருக்கும் நிரந்தரமுமில்லை
எல்லாம் நமக்கு இங்கே சொந்தமுமில்லை
நடக்கும் பாதை நமக்கு உரிமையுமில்லை
பார்க்கும் காட்சி நம் சொத்துமில்லை
பரிதவிப்புகள் எல்லாம் பாசமுமில்லை
காணும் கனவுகள் நினைவில் நிற்பதுமில்லை…

மனமே!
நீ ஏங்காதே!!
காலத்தின் கட்டாயங்கள் காயங்களில்லை
ஆறும் நேற்றைய இரணங்கள் யாவும் இன்றே
வதங்கி வாடாதே கண்ணீரை வழிய விடாதே
வாழ்க்கை என்றும் அவ்வளவு கடினமில்லை
வழிகள் எங்கும் முட்கள் மட்டுமேயில்லை
வலிகள் ஒன்றும் கொடூரமானவை இல்லை
வாழ்க்கை வலிகளை மட்டுமே தருவதுமில்லை…

மனமே!
நீ ஏங்காதே!!
மழையின்றி நீயும் வறண்டு போகாதே
மழை நீரில் கண்ணீரை தினம் கரைக்காதே
தண்ணீரில் தாகம் நாளும் தீர்ந்துவிடாதே
இல்லாததற்கு இனியும் நாளும் ஏங்காதே
ஏங்கினால் அதே இடத்தில் இனி தங்காதே
தேடிச்செல்லாமல் தேங்கி இருந்து வாடாதே…

மனமே!
நீ ஏங்காதே!!
வானமே இனி எல்லையே இல்லை
வழியில் எந்த துன்பமும் நிலைத்ததில்லை
வாழும் வாழ்க்கை என்றுமே வலித்தேயில்லை
மழலை என்றும் வாழ பயந்ததேதியில்லை
உன் மடியில் எந்த கணமும் இனியில்லை
துன்பம் எல்லாவற்றையும் வெகு தூரமாக்கு
நெஞ்சில் உள்ள பாரத்தை தூள் தூளாக்கு…

வாழ்க்கை எவ்வளவு கடினமானதோ
அதைவிட மிகவும் எளிதானது…!🍫👍
மகிழ்ந்திரு மகிழ்கொடு மகிழ் சூழ்…!☺️

மனமே!
இனி நீ ஏங்காதே!!

– கவிதை கிறுக்கன் மணி

எழுதியவர் : செண்பகவள்ளியின் மகன் மணி (12-Apr-17, 2:31 pm)
பார்வை : 1256

மேலே