மனமே சாந்தமடைவாயாக

இயற்கையும், செயற்கையும் மாறி மாறிக் குழப்ப, விருப்பம் போல் வாழ்க்கையென்பது எல்லாம் கனவில் தானே என்றே ஏங்கி, குற்றமில்லா உணர்வுகளையும் குழி தோண்டி புதைத்துவிட்டே வாழ்வை வேண்டி, மகிழ்ச்சியை வேண்டி,
இறைவனைப் பூஜிப்பதால் மட்டுமென்னவாகப் போகிறது?..

நன்றாகப் படித்து, படித்ததை தேர்வுத்தாளிலே எழுதினால் தானே நாம் தேர்ச்சியடைவதும் சாத்தியமே...
வீணே இறைவனைத் துதிப்பதால் எப்படி தேர்ச்சியடைவோம்??...

வஞ்சத்திற்கு வஞ்சமே பதிலாக, பழிக்குப்பழி என்பதே தொடர்கதை என்றே ஆன உலகில்,
தமிழிலே நான் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கெதிராய் அனைவரையும் அணிவகுத்து அனுப்பி வைக்க, தனிமரம் என்றுமே தோப்பாகாதென்றே,
அறிவும் அனுபவம் பெற,
என் நாக்கே எனக்கு எதிரியானதோ???...
என்றே சிந்தனையும் தாக்குகிறது...

உதவியை எதிர்ப்பார்த்து உண்மையை துறக்கலாமா?...

உண்மையே நிரந்தரம்...
கடைசிவரை முயற்சிக்க என்றும் பயந்துவிடாது,
உனது உழைப்பிலே உனக்கு பிடித்ததை நீயே உருவாக்கு...
அதுவே சந்தோஷம்....
இல்லையே அதுவே தோஷம்....
எல்லாருக்கும் பின்னே கடைசியாளாய் நிற்பதை நினைத்தென்றும் வருந்தாதே...
கடைசியானாலும் கற்றுத் தெளிந்து, உண்மையாய் வாழ்வதே மகிழ்ச்சி......

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Apr-17, 11:47 pm)
பார்வை : 1055

மேலே