மியா - கியா

அம்மா, உங்க மருமகள் முத்தம்மாளுக்கு அஞ்சு வருசம் கழிச்சு இரண்டாவது பிரசவத்தில ரட்டை பெண் குழந்தைங்க பொறந்திருக்குது. மூத்த குழந்தையும் பெண் குழந்தை. அதாம்மா எனக்கு ஒரே கவலையா இருக்குதும்மா.
😢😢😢😢😢😢
மவன்னே மாரியப்பா, இரட்டைப் பெண்குழந்தைங்க முத்துவுக்கு பொறந்திருக்கிறது ரொம்ப சந்தோசமான செய்திடா. இப்ப பெண் குழந்தைங்க பிறப்பு கொறஞ்சிட்டு வருதாம். எதிர்காலத்தில பொண்ணு கெடைக்காம நெறையப் மாப்பிள்ள பசங்க அலையப்போறாங்க. பசங்களப் பெத்தவங்க பொண்ணுங்கள பெத்தவங்க கால்ல விழுந்து கெஞ்சி கூத்தாடி நேறைய வரதட்சணை தர்றோம்-னு சொல்லி அழப்போறாங்க. நீ அதிர்ஷ்டசாலிடா மாரி. மூணு பொண்ணுங்கள பெத்த தகப்பன்டா நீ. நீ பல லட்சங்களுக்கு அதிபதி ஆகப்போறது உறுதிடா.
👍👍👍👍👍👍
அம்மா நீங்க இதச் சொன்னதுக்கப்பறந்தான் எனக்கு மனசுக்கு ஆறுதலா இருக்குது. சரி கொழந்தைங்களுக்கு நல்ல தமிழ்ப் பேருங்களாச் சொல்லுங்க. நீங்கதான் அரசாங்கம் இலவசமா தந்த டிவியை ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் பாக்கறீங்க. அதானல மின்சாரக் கட்டணம் தான் அதிகமாகுது.
😊😊😊😊😊😊
மவனே மாரி, நம்ம கிராமத்தில 50 வயசுக்கு கொறைவா இருக்கறவங்கள ஒரு அஞ்சு பேரோட பேருங்க மட்டுந்தான் தமிழ்ப் பேருங்களா இருக்குது. பெரிய படிப்பு படிச்ச ஆசிரியர்கள், பேராசிரியர்களே அவுங்க புள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வைக்கிறதில்ல. நீயும் ஊரோட ஒத்துப் போறதுதான் நல்லது. என்னோட எதிர்ப்பையும் மீறி உங்கப்பா உனக்கு மாரியப்பன்-ங்கற (மாரி = மழை) பேர வச்சிட்டாரு. உன்னோட மூத்த பொண்ணுக்கும் முத்துமாரி-ன்னு. பேரு வச்சிட்டாரு. இப்பெல்லாம் சினிமா டிவி பாத்துட்டு புள்ளைங்களுக்கு நூத்துக்கு நூறு வேற மொழிப் பேருங்களத்தான் வச்சுடறாங்க.
👍👍👍👍👍👍👍
நீங்க சொல்லறது சரிதாம்மா. நீங்களே உங்க பேத்திங்களுக்கு நீங்க விரும்பற பேருங்கள வச்சுடுங்கம்மா.
😊😊😊😊😊😊😊
சரிடா மாரி. பேருங்களுக்கு என்ன அர்த்தம்னெல்லாம் பாக்கக்கூடாது. தமிழ்ப் பேரா இல்லாம இருக்கணும். அதுதாண்டா முக்கியம். நாஞ் சொல லறென். நல்லா கேட்டுக்க. ஒரு கொழந்தைக்கு மியா -ன்னு பேரு வச்சிடு. இன்னொரு கொழந்தைக்கு கியா -ன்னு பேரு வச்சிடு.
😊😊😊😊😊😊😊
முத்துமாரி, உனக்கு இந்தப் பேரெல்லாம் பிடிச்சிருக்கா.
😊😊😊😊😊😊😊
எனக்கு தாத்தா எதுக்கு முத்துமாரி -ன்னு பேரு வச்சாரோ தெரில பாட்டிம்மா. யாராவது சினிமா நடிகை பேர வச்சிருக்கலாம். நீங்க சொன்ன மியா -கியா ரொம்ப அழகான பேருங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@@@@@@@@@@@@@@@@@@@@@
Miya = புனிதமான வீடு ( ஜப்பானிய மொழியில்)
Mia = அன்புக்குரிய ( டேனிஸ் & சமஸ்கிருத மொழிகளில்)
Kya = வெற்றி கொள்ளமுடியாத, கடவுளிடம் பெரும் பக்தி கொண்ட (பூர்வீக அமெரிக்க & சமஸ்கிருத மொழிகளில்). இருபாலருக்கும் பொருந்தும் பெயர்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

எழுதியவர் : மலர் (14-Apr-17, 5:47 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 205

மேலே