வருக தமிழ் சித்திரை திருமகளே

சித்திரை திருமகளே !!வருக !வருக !!
 பன்னிரெண்டு தமிழ் மாதங்களில் மூத்தவளே!
 தொடங்கும் வருடம் முழுவதும் புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான வருடமாக அமைய வாழ்வில் நம்பிக்கை அளிப்பவளே!!
 வாசலில் சாணத்தால் மெழுகி கோலமிட்டு, வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி நெஞ்சம் மகிந்து உன்னை வரவேற்பெனடி!!
 ஆறு காலங்களில் முதல் காலமான 'இளவேனில்காலம்’ என்னும் வசந்த காலத்தை தொடங்கியவளே!!
 இராசிச் சக்கரத்தில் பன்னிரண்டு ராசியின் முதல் ராசியான மேஷ இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் எனும் சக்கரத்தை சுழற்றிவிட்டவளே !!!
 பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுவதற்காக : சித்திரை நட்சத்திரத்திலேயே 'ஆலகால சிவன்' சித்திரம் ஒன்று வரைய அதிலிருந்து சித்திரகுப்தன் தோன்றிய பொற்காலமும் நீயே !!
 முக்கூடல் நகராம் மதுரை மாநகரில் சித்திரை பவுர்ணமியில் தான் கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதை, அன்று மாபெரும் விழாவாக உன்னால் கொண்டாடப்பெற சிறப்பு மிகுந்தவளே!!!
 சித்திரை முதலாம் நாள்தான் இந்து சமயக் கோயில்களில் முக்கியமாக திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்வுகள் நடத்தச்செய்தவளே!!!!
 சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாம் பிறை தோன்றும் நாள் 'அக்ஷய திருதியை' சிறப்பித்து தந்தவளும் நீயே !!
 உழைப்பை சிறப்பிக்கும் நாளான தொழிலாளர் தினத்தையும் , தீண்டாமை ஒழியப் போராடிய அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளையும் உன் மாதத்தில் அமையச்செய்து பெருமிதம் கொண்டவளே !!
 இலங்கையில் தமிழ்- சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக போற்றப்படும் மாதமான திருமகளே !!!
 சிங்கள பெளத்தர்கள் உன் (சித்திரைப்) புத்தாண்டை பகைமை ஒழிப்புக்கான சிறந்த வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்ளும் பெருமை வாய்த்தவளே !!
 சதுர் மஹாயுகம் ஆரம்பித்தது சித்திரை முதல் தேதியன்று என்றும்,
 சித்திரையின் வளர்பிறை துவிதியையில் கிருத யுகம் பிறந்தது என்றும்,
 வளர்பிறைப் பஞ்சமியில் கூர்ம கல்பம் பிறந்தது என்றும்,
சித்திரையின் வளர்பிறை சப்தமியில் கங்கை நதி பிறந்தது என்றும்,
சித்திரையின் வளர்பிறை திரயோதசியில் மத்ஸ்ய அவதாரம் நடந்தது என்றும், சித்திரையின் தேய்பிறைப் பஞ்சமியில் வராஹ அவதாரம் நடந்தது என்றும்
சித்திரை மாதம் வரும் சுக்ல பட்ச (வளர்பிறை) நவமி திதியில்தான் ராமர் பிறந்தார். அன்றைய தினம் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது என்றும்,
சித்திரை மாதம் திருதியை அன்று மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரம் செய்தார். அன்றைய தினம் மத்ஸ்ப ஜெயந்தியாக நடக்கிறது என்றும்
 சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமி தினத்தில் லட்சுமிதேவி, வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு விஜயம் செய்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
எனவே அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்றும் கொண்டாடப்படுகிறவளே!!
 சித்ரா பௌர்ணமி அன்றுதான் காவியத்திற்கு பேர் பெற்ற கண்ணகியைக் காண்பதற்கு பாண்டிய மன்னனால் மதுரையில் கொலையுண்ட கோவலன் விண்ணிலிருந்து வருகிறான். கோவலனுடன் கண்ணகி விண்ணுலகம் செல்வதை இன்றும் தமிழக-கேரள மக்கள் மங்கல தேவி என்னும் ஊரிலுள்ள கண்ணகி கோயிலில் சிறப்பாக விழா கொண்டாடுகிறார்கள்.

________________________________________
இத்தகைய சிறப்பினை பெற்ற நீ - பெறச்செய்த உன் தமிழ் மக்களை :
உன்னை போற்றத்தகுதியான விவசாய தமிழ் மக்களை துன்பத்தில் ஆழ்த்துவது ஏனோ???
என் நாட்டு மக்களை அவர் உரிமையும் உடைமையும் காக்க மற்றொருவரை சார்ந்து போராட செய்யும் அவல நிலை ஏனோ??
உன் மேல் கோபம் எனக்கு , இருந்தும் உன்னை போற்றுகிறேன், நீ என் தமிழ் என்று!!!
வாழ்க தமிழ் !! வளர்க விவசாயம் !!

எழுதியவர் : கவிதை ரசிகை (14-Apr-17, 6:23 pm)
சேர்த்தது : ஹரிணி
பார்வை : 247

மேலே