வீடு வாங்கலையோ

நமக்கு வாழ்வில் நடந்தவை பகிரும்போது சிலருக்கு பயன்பட்டால் சற்று மனம் கனியும்...

எடுத்துக்காட்டாக இளைஞர்கள் ஒரு வேலைக்குச் சேர்ந்தபின் ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை வருவது இயல்பு. அவர்களுக்கு விற்கும் விலையில் நாம் எல்லாம் எப்படி வாங்கப் போகிறோம் என்ற மலைப்பும் இருக்கும்... பெரியவர்களைப் பார்த்து நீங்கள் அந்தக் காலத்தில் சுலபமாக வாங்கி விட்டீர்கள்... நாங்க இப்பொழுது விற்கும் விலையில் எப்படி வாங்குவது...?

அவர்களுக்கு நான் சொல்வது, வீடு வாங்குவது என்பது எப்பொழுதும் ஒரு சவாலான விசயம்.. நாம் சில தியாகங்கள் செய்தால் ஒழிய அவை என்றும் சாத்தியம் இல்லை... எப்பொழுதும் அது எட்டாக் கனி.. இக்காலத்தில் எளிதில் கிடைக்கும் வீட்டுக் கடனால் சற்று சுலபமானது என்றாலும், எளிதல்ல...
என் வீட்டையே பாருங்கள்.. 1982-ல் வீட்டுவசதி வாரியத்தின் குலுக்கலில் விழ, தவணை முறையில் வாங்கியது... சென்னையின் மேற்குப் பகுதியில், அண்ணா நகர் மேற்கின் விரிவாக்கப் பகுதியில் எல்லையில் 385 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு.. திருமங்கலம் தாண்டினால் எந்த போக்குவரத்து இருக்காது அன்று.

இளைஞரைப் பார்த்து "என்ன விலையிருக்கும் வாங்கும்போது கூறுங்கள்"என, இன்றய நிலைய மனதில் வைத்து.. கொஞ்சம் மூளையைக் கசக்கி "என்ன ஒரு 5 லக்ஷ்ம் இருக்குமா?" என்பார்..

"இல்லை ரூ47,000/-"

அப்படியே வாய் பிளந்து "அவ்வளவு மலிவா...?" "இன்னும் ஒன்று வாங்கி போட்டிருக்கலாமே"

"கொஞ்சம் இருங்க.... அந்த ரூ47,000/- மொத்தம் கட்டவில்ல ஆரம்ப பணமாக ரூ15,000/- மட்டுமே... மற்றவை மாதம் ரூ444/- பதினைந்து வருடங்களுக்கு"

"இப்ப அப்படி இருந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும் நாங்களெல்லாம் வீடு வாங்க.."

இளைஞரை சற்று ஆசுவாசப் படுத்தி 'இப்பவும் அதே நிலைதான்' என, கேள்விக் குறியாய் முகத்தை வைத்துக் கொண்டார்..
ரூ15,000/-ற்கு அன்னாளில் நிதி ஆதரம் என்ன என்று நினைக்கிறீர்கள்? இப்பொழுதுபோல் வீட்டில் உள்ள அனைத்து வெள்ளி, தங்கம், வைப்பு நிதியில் கடன், அப்பாவின் உதவி... அதற்காக அங்கும் இங்கும் அலைந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டுவதற்குள் தாவு தீர்ந்துவிடும்... அதன் பிறகு மாதா மாத தவணை, சம்பளத்தில் பாதி விழுங்கிவிடும்... மீதி சம்பளத்தில் கடனில்லா வாழும் கொள்கையைக் கடை பிடிக்க நிரந்தர கணக்குப் போராட்டம்.. ஆனால் ஒன்று, வருடங்கள் செல்லச் செல்ல இந்த சுமை பழகிவிடும் அல்லது நிதி நிலை முன்னேற்றத்தால் சுமை குறையும்.
இப்ப சொல்லுங்க, வீடுவாங்குவது அப்பவும் சவால்தானே?

இளைஞர் உற்சாகமாகி, விடுவதில்லை வீடு வாங்கியே தீருவது என்று கிளம்பிவிடுவார்....
---முரளி

எழுதியவர் : முரளி (15-Apr-17, 9:23 am)
சேர்த்தது : முரளி
பார்வை : 99

சிறந்த கட்டுரைகள்

மேலே