மல்லிகை மண ன ம்

மல்லிகை மண(ன)ம்

மல்லிகை மலர்ச் சூடி
மங்கலமாய் பொட்டிட்டு

தூய்மையாய் துகிலணிந்து
மயிலாக நடை நடந்து
குயிலொன்று வருகையிலே

வீதியிலே வீற்றிருக்கும்
கண்களெல்லாம் தனைநோக்க

மங்கை அவள் மனமெல்லாம்
மணவாளன் வருகை எண்ணி
காத்திருக்கும் வேளையிலே

மணவாளன் வந்துவிட்ட
வாசனையை மங்கை அவள் மனம் நுகர

பெண் கேட்டு வந்தவரோ
பொன் கேட்டு சென்றுவிட

மல்லிகையும் மணம் இழந்து
சருகாய் ஆனதுவே கன்னி அவள் மனம் போல ....!

எழுதியவர் : கவிக்குயில் (15-Apr-17, 11:54 am)
சேர்த்தது : கவிக்குயில்
பார்வை : 359

மேலே