சுய தேர்ச்சி

பல்கலைக்கழகங்களில் படித்து பட்டங்கள் ஆயிரம் பெற்றாலும் சுய தேர்ச்சிக்கு அவையெல்லாம் ஈடாகுமா???...

சுய தேர்ச்சி எவற்றை அடிப்படையாகக் கொண்டவையென்றே உலகம் உணர வேண்டுமெனில் சுய தேர்ச்சியை யாவரும் அனுபவமாய் பெற்று தேர்ச்சியடைய வேண்டியதும் அவசியமே...

சுய பகுத்தறிவும், சுய ஒழுக்கமும் அடிப்படையாய் அமைய சுய தேர்ச்சியென்பது முடிவில்லா வாழ்க்கையாய் அமைந்திடுமே...

பய உணர்வை அறுத்தெறிந்து, நாளும் தைரியமாய் வாழ, சுய தேர்ச்சியே துணை வருமே...
பிரச்சனைகளுக்கும் பஞ்சமில்லை...
தீர்வுகளுக்கும் பஞ்சமில்லை...

சிறந்த அறிவாளியென்பவன் சூரியனாக பிரகாசிக்க வேண்டியதால், அகல்விளக்காய் எரியும் நம் அறிவுதனை வளர்க்க நாளும் சிந்தனையென்னும் தூண்டுகோலும் அவசியமே...

ஊஞ்சலின் ஆட்டமெல்லாம் உந்துவிசை உள்ள வரையே...
உந்துவிசை நின்றுவிட்டால் ஊஞ்சலின் ஆட்டமும் நின்றுவிடும்...

உன்னை நீயே தயார் செய்..
என்னை நானே தயார் செய்கிறேன்...
இதுவே சுய தேர்ச்சி...

லட்சியம் எதுவாயினும் சுய தேர்ச்சியே படிகற்களாகிறது, லட்சியத்தை எட்டிப் பிடிக்க....

சுய தேர்ச்சியில்லா முயற்சி, பயிற்சியில்லா ஓட்டுநர் வாகனம் ஓட்டுதல் போலே முட்டி மோதியே தோல்வியை நாடும்.......

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Apr-17, 11:38 pm)
Tanglish : suya therchi
பார்வை : 574

மேலே