சம்பவம் 01

என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு பஸ்சில் இடம் கிடைத்தது,
வியர்வை நாற்றத்துடன், படியில் பயணித்தாக வேண்டிய கட்டாயம் திங்கள் முதல் வெள்ளி வரை,
இன்று சனிக்கிழமை, மூன்று பேர் சீட்டில் கடைசி ஆளாக அமர்ந்தேன்,
குதிரை ஒன்று முன்னங்காலை தூக்கியவாறு இருந்ததை கவனித்தேன்,
பொன்னியின் செல்வன் புத்தகத்தின் அட்டை படம் கண் முன் வந்து சென்றது,
கனவா, என திரும்பி பார்த்தேன், காட்சி பின்னுக்கு சென்றுவிட்டது.
நல்லா செதுக்கி இருக்காங்கல்ல என தன் பேரனிடம் கேட்டார் ஜன்னல் ஒர பெரியவர்,
ஓ! சிற்பமா என நினைத்துக்கொண்டேன்.
அதற்கு ஆமாம் ஆமாம், என கடுப்புடன் கூறினான்.
தம்பி நா என்ன சொன்னேன்னு இவன் கோவிச்சுகிறான்.
அவரிடம் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, குளித்த தலையை ஆடுவது போல் வேறொருபக்கம் திருப்பினேன்,
ஒரு கல்லூரி பெண் முன் சீட்டுக்கு பக்கவாட்டில் அமர்ந்திருந்தாள்,
ஒரு கையில் போன், மற்றொரு கையில், அது என்ன குடை மாதிரி தெரிகிறதே,
ஆமாம், இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக செருப்பு மாட்டும் போது கேட்ட செய்தி வாசிப்பு
நினைவுக்கு வந்தது.

இல்லை! இல்லை!

வெயிலில் காயாமல் காத்துக்கொள்ளும் ஜாதி மான்கள் இவை.

எழுதியவர் : பூபாலன் (16-Apr-17, 7:29 pm)
சேர்த்தது : பூபாலன்
பார்வை : 231

மேலே