காதல் பழக வா-16

காதல் பழக வா-16
ஊடலும் கூடலும் தான்
திருமண வாழ்க்கை எனில்
நாம் பார்த்த ஊடல் வரை
போதுமடி கண்ணே......
இனி கூடலுக்குள் கூடிநின்று
வாழ்ந்து பார்ப்போம்
நாம் கைகோர்த்த வாழ்க்கையை
என் ஆசையை
மறுத்துவிடாத என் காதல் பெண்ணே......

"ராதி நீங்க இன்னும் கிளம்பலயாமா, நாங்க எல்லாரும் ரெடியா இருக்கோம், சீக்கிரம் ரெடியாகிட்டு கீழே வாங்க"

"ராதி சீக்கிரம் வாடி, அவங்க எல்லாம் ரெடி ஆகிட்டாங்களாம், கூப்டுட்டே இருக்காங்க"
"ஆமா போடி, ரிஷப்ஷனே நடக்க போறதில்லையாம், இதுல ரிசப்ஷனுக்கு புடவை எடுக்கணுமாம், எனக்கு எரிச்சலா இருக்குடி "
"சரிடி நீ தான் எதோ பிளான் பண்ணிருக்கேன்னு சொன்னியே அத வச்சி இந்த ட்ரிப்பை என்ஜாய் பண்ணலாம், இப்போ நீ முதல கிளம்பி வா"
"ஆமாடி இன்னைக்கு அவனுக்கு இருக்கு, இதுக்காகவே வரேன், ஒரு பைவ் மினிட்ஸ் கிளம்பிடறேன்"
நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்னு தெரியாமல் கிளம்பியபடியே திட்டம் போட்டு கொண்டிருந்தாள் ராதி......

"வாங்கடி போகலாம், இன்னைக்கு எதாவது அவனை பண்ணினா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்"
ராதியின் வரவை எதிர்பார்த்து மொத்த குடும்பமும் ஹாலில் காத்திருக்க எதை பற்றியும் கவலை இல்லாமல் சாவகாசமாக வந்த ராதியை யாருக்கும் தெரியாமல் ரசித்து கொண்டிருந்தான் கண்ணன்....
"ராதி உன் பிரண்ட்ஸ் எல்லாரும் வந்தாச்சுல்ல போகலாமாமா"
"போகலாம் அத்தை"

"ஏண்டி, கல்யாண புடவை எடுக்கவே திருவிழாக்கு போற மாதிரி இல்ல கிளம்புறாங்க, இதெல்லாம் ரொம்ப ஓவர் டி"
"இந்த குடும்பத்துல எல்லாமே ஓவரா தாண்டி நடக்குது, அத மாத்த தானே உங்களை எல்லாம் கூப்ட்ருக்கேன், நாம மாத்திருவோம்"

வேணும், காரும் வைட்டிங்கில் நிற்க, வேனில் யாரெல்லாம் ஏற வேண்டும் என்ற லிஸ்ட் முடிந்ததும் காரில் கண்ணனோடு ராதியை வர சொல்லிவிட்டு வேன் கிளம்பியது, போதாக்குறைக்கு ராதியின் தோழிகள் பட்டாளத்தையும் வேனில் அடைத்து கூட்டிச்செல்ல ராதியால் உள்ளுக்குள் மட்டுமே புலம்ப முடிந்தது.....

கார் டோரை திறந்துவிட்டு கண்ணால் காருக்குள் ஏற கண்ணன் சொல்லியும் ராதி கொஞ்சம் கூட அசையாமல் அதே இடத்தில நிற்க கண்ணனோ காருக்குள் ஏறி வண்டியை கிளம்பி கொண்டு போயே விட்டான்......

அட கடவுளே, இவன் என்ன நம்மள இப்படி விட்டுட்டே போய்ட்டான், இப்போ என்ன செய்றது, ரொம்ப முரண்டு பிடிச்சிட்டமோ, இருந்தாலும் அவன் எப்படி என்ன இங்கேயே விட்டுட்டு போக முடியும்,ரொம்ப திமிர் பிடிச்சவன் தான், இவன் திமிருக்கு பர்ஸ்ட் ஒரு முடிவு கட்டணும், ஆனா இப்போ என்ன பண்றது, நாம வறத நம்பி இவளுங்க வேற போயிருக்காங்களே.......

இப்படி மனதுக்குள்ளேயே புலம்பி கொண்டு ராதி நிற்க சரியாக பத்து நிமிடங்களை கடத்திவிட்டு கண்ணனின் கார் ராதியின் முன்னால் வந்து நின்றது.......

இந்த முறையும் கண்ணன் கார் கதவை திறந்து வைத்து கொண்டு காத்திருக்க ராதியோ ஏற்கனவே அவன் விட்டு சென்றதில் கொஞ்சம் பதட்டமாக இருந்ததால் ஓரிருநிமிடங்களில் சுதாரித்து கொண்டு வண்டிக்குள் ஏறிக்கொண்டாள்.....
காருக்குள் ராதி ஏறி கொண்டதும் கண்ணன் வெற்றி புன்னகையை சிந்த ராதிக்கோ பற்றி கொண்டு வந்தது....இவன் முன்னால் தோற்று விட்டோமே, இதற்கும் சேர்த்து பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்....

கியரை பிடிக்கிறேன் என்ற பேரில் அவ்வப்போது ராதியின் காலை கண்ணனின் கரங்கள் தீண்டி செல்ல ராதியோ நெருப்பை போல சிவந்தபடி அமர்ந்திருந்தாள்.....ஒருகட்டத்தில் பொறுக்கமுடியாமல் கோவத்தை கொட்டியே விட்டாள்.....
"இப்போ எதுக்கு என்ன அப்பப்போ டச் பண்றிங்க?"

"நான் எங்கம்மா உன்ன டச் பண்ணேன், கியரை தான் பிடிச்சேன்"

"கியர் அங்க இருக்கு, இது என்னோட கால், இத்தனை தெரிஞ்சவங்களுக்கு இது என் காலுன்றது மட்டும் எப்படி தெரியாம போச்சோ"

"தெரியாம போனுச்சுனு யார் சொன்னா, சிலதை தெரிஞ்சிக்கணும்னு தான் முயற்சி பண்றேன், பட் முடியமாட்டேங்குது"

ஹஸ்கி வாய்ஸில் கண்ணன் பேசியதை கண்கொட்டாமல் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள் ராதி....இவன் இப்படியெல்லாம் கூட பேசுவானா, இவன் ஒட்டுமொத்த குடும்பமும் கூடி கொண்டு இவன் ரொம்ப கண்ணியம், கட்டுப்பாடு, உழைப்புனு புகழ் உச்சியிலே கொடிகட்டி பறக்கறவனு நிமிஷத்துக்கு நிமிஷம் பேசுது, இவன் என்னனா தனியா இருக்க பொண்ணுகிட்ட அத்துமீறி பேசறான், பழகறான், ரெட்டை வேஷம் போடறானே....ராதி உள்ளுக்குள் நினைப்பதையெல்லாம் அவள் விழிவழியே படித்துக்கொண்டே வந்தான் கண்ணன்....

"நீ என்ன நினைக்கிறேன்னு உன் கண்ணே காட்டி குடுக்குது கண்மணி, நான் மத்த எல்லாருக்கும் கண்ணியமான கண்ணனா இருக்கலாம், ஆனா நான் தாலி கட்டிய பொண்டாட்டிகிட்டயும் அப்படியே நடந்துக்க முடியுமா, நமக்குள்ள இதெல்லாம் நடக்கணுமே, இதுக்கு பேரு தானே தாம்பத்தியம், இதெல்லாம் உனக்கு தெரியுமா, இல்லை ஒவ்வொண்ணா சொல்லிக்கொடுக்கணுமா"

இதை கேட்டதும் ராதிக்கு தலைசுற்றலே வந்துவிட்டது, கேட்பதும்,பார்ப்பதும் பொய்யா, இதெல்லாம் என் கற்பனையா இல்லை கனவா? ஒண்ணுமே புரியலையே, இவனா இப்படியெல்லாம் பேசறான்......

"என்ன ராதி எல்லாம் கனவு மாதிரி இருக்கா? கேட்டுக்கொண்டே ராதியின் கையில் நறுக்கென்று கிள்ளியவன் அவள் வழியில் ஆஅ.. என்று கத்தியதும் "இப்போ புரியுதா, இதெல்லாம் கனவில்லை, உண்மைதான்னு" என்று கண் அடித்துக்கொண்டு கன்னக்குழி தெரிய சிரிக்கவும் ராதிக்கு என்னவோ அவனோடு கைகோர்த்துக்கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது......

தறிகெட்டு ஓடும் மனக்குதிரையை அடங்குவதற்குள் பெரும்பாடாய் இருந்தது ராதிக்கு, சீ, என்ன இது, இவன் என்னோட எதிரி, என்னை கல்யாணம்ன்ற பேர்ல சிறை பிடிச்சி வச்சிருக்கறவன், இவனை பாத்து எதுக்கு இப்படி மனசுக்குள்ள என்னென்னவோ தோணுது, முதல்ல இவனோட தனியா இருக்கறதுல இருந்து தப்பிக்கனும் ,கடைக்கு போகற வர எதுவும் பேசாம அமைதியா வர்றது தான் இப்போதைக்கு நல்லது என்று நினைத்தவளாய் சீட்டில் சாய்ந்து கொண்டு கண்களை மூடியபடி தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்தாள்.....
கண்ணனோ ராதியின் நடிப்பை அறிந்தும் அவளை கைகளால் தீண்டாமல் கண்களால் மட்டுமே தீண்டியபடி காரை ஓட்டிக்கொண்டிருந்தான்......
ஒரு கட்டத்தில் கார் அசைவு இல்லாமல் நின்றது போல் இருக்க மெதுவாக கண்களை திறந்த ராதியோ கண்ணனின் நெருக்கத்தில் மூச்சடைத்து போனாள்.....

"என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

"அது ஒன்னும் இல்ல, தூங்கிட்டு இருக்கும்போது கிஸ் பண்ணா எப்படி இருக்கும்னு டெஸ்ட் பண்ணி பாத்துட்டு இருக்கேன்"

"என்னது" அதிர்ச்சியில் உறைந்திருந்தவளை பார்த்துவிட்டு சீரியஸாக இருந்த முகத்தை சிரித்தபடி மாற்றிக்கொண்டான்....

"ரொம்பலாம் ஆசைப்படாத, டோர் ஒழுங்கா க்ளோஸ் பண்ணாத மாதிரி இருந்தது, நீயும் தூங்கி தூங்கி டோர்ல இடிச்சிக்கிட்ட, எங்க கீழ விழுந்துட போறியோன்னு தான் டோரை செக் பண்ணேன்"

ராதிக்கு அப்போது தான் தெரிந்தது , தூங்குவதை போல நடிக்க நினைத்து நிஜத்தில் தூங்கி போனது...

என்ன ராதி நீ... நீயெல்லாம் ஒரு வில்லியா, வில்லனை பக்கத்துல வச்சிக்கிட்டு நிம்மதியா எப்படி உன்னாலலாம் தூங்க முடியுது, உன்னயெல்லாம் நம்பிக்கிட்டு இவன்கிட்ட வேற வீராப்பா சவால் விட்டுட்டேனே, இவன் முன்னாடி தோற்கடிச்சிடாத, இனியாவது விழிப்போடு இரு ராதி என்று தனக்கு தானே கூறிக்கொண்டாள்......
ஆனால் அவனின் அருகாமையும், ஸ்பரிசமும் அவளுக்கு பாதுகாப்பு உணர்வையும், காதலையும் உணர்த்துவதையெல்லாம் அறியாமல் பகைமையை மட்டும் கண்மூடித்தனமாக வளர்த்துக்கொள்வதை ராதியால் மாற்றிக்கொள்ள முடியவில்லை......

"காரை எதுக்கு இங்க நிறுத்தறீங்க, நாம கடைக்கு தான போகணும், அத்தை சொன்ன கடை இங்க இல்லையே, இங்க இருந்து முதல வண்டிய எடுங்க என்று தொணதொணத்தவளின் உதடுகளை தன் விரல்களால் அமைதியாக்கினான்.....

"உஷ்ஷ்ஷ்ஷ்........இப்போ எதுக்கு இவ்ளோ பயப்படற, நீ இவ்ளோ பயந்தாகொள்ளினு தெரியாம போச்சே"
"நான் ஒன்னும் பயப்படலயே, எதுக்கு இங்க நிறுத்தினீங்கன்னு தான் கேட்டேன், நான் ஒன்னும் பயந்தாகொள்ளிலாம் இல்ல"
"சும்மா பொய் சொல்லாத, என்கூட தனியா மாட்டிகிட்டத்துல ரொம்ப தான் பயந்து போய் இருக்க, உன் கண்ணே காட்டி கொடுக்குதே"

"உங்ககூட நான் தனியா மாட்டிக்கிட்டேனா, நினைப்பு தான், என்கிட்டே இருந்து நீங்க ஜாக்கிரதையா இருந்துக்கோங்க, உங்களை பாத்துலாம் எனக்கு பயமே இல்லை"
ராதியின் வாயில் வந்த வீர வசனங்கள் எல்லாம் அவளின் மனபயத்தை மாற்றவில்லை, இருந்தாலும் அவளின் ஈகோவை கண்ணனின் வார்த்தைகள் பதம் பார்த்ததில் வேறு வழியில்லாமல் பயம் இல்லாததை போல் நடித்துக்கொண்டே கண்ணனோடு அவன் கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டியதாயிற்று....

"இது என்ன இடம், எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க?" என்று கேட்க நினைத்தாலும் எதையும் கேட்க முடியாமல் பதட்டத்தோடு அவன் பின்னால் சென்றாள் ராதி.....

எழுதியவர் : ராணி கோவிந்த் (17-Apr-17, 4:28 pm)
பார்வை : 686

மேலே