பாலிய குற்றங்கள் விழிப்புணர்வு தொகுப்பு

உலகில் ஆண் பெண் இருவரும் சமம் என்பது ஆதிகாலம் முதல் இன்று வரை பெண் சமுதாயத்திற்கு குரல் கொடுக்கும் ஆர்வர்களின் ஒருமித்த குரல்.அப்படிபட்ட இந்த சமுதாயத்தில் நம் பெண் தோழிகளுக்கு இன்றைய சூழ்நிலையில் அவர்கள் செல்லும் இடங்களில் ஒரு பாதுகாப்பு அற்றநிலை காணப்படுகிறது.இவற்றின் பின்னனியில் காணப்படும் அந்த கொடிய குற்றவாளிகள் யார்.அனைத்து துறைகளிலும் நாம் முன்னோறிய இன்றைய சமுதாயத்தில் நம்மை சுதந்திரமாக நம்முடைய பயணத்தை தொடர தடுக்ககூடியவைகள் பற்றிய காண்போம்.இப்பெரிய பாலிய குற்றங்களில் நம் பெண் இளம் குழந்தைகளும் பாதிக்கபடுவது நம்மை கண்ணீர் மல்க வைக்கிறது.சமுதாயத்தில் மதுக்கு அடிமையான ஆண் தோழர்களின் சந்தோஷம் என்று கருதப்படும் மது பழக்கங்கள்.மற்றும் திரைப்படங்களில் நம் பெண் தோழிகளின் காலச்சாரம் அற்ற உடை அலங்கரங்கள்(ஆபாச காட்சிகள்) மற்றும் உலகை ஒன்றினைக்கும் வலைதளங்களில் உள்ள ஆபாச புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் கொண்ட வலைதளங்கள்.இவைகளை பார்க்கும் நம் அன்பு தோழிர்கள் மனசாட்சிக்கு விரோதமாக தங்களின் குடும்பத்தில் பெண்கள் தெங்வங்களாக உள்ளனர் என்பதை மறந்து நம் பெண் தோழிகளிடம் அநாகரிமாக நடந்து கொள்கின்றனர்.தோழிகளே நாம்க்கு எற்படும் இக்கொடுமைகளை மறைப்பதால் இன்னும் நம் இனத்தின் மீது ஆண்களின் கொடுர பார்வை அதிகரிக்க தான் செய்யும்.அக்கொடுமை நம்மை மட்டும் ஆட்கொள்ளாது ஒன்றும் அறிய நம் பெண் குழந்தைகளும் பாதிக்கபடுகின்றனர்.
விழிப்புணர்வு வழிமுறைகள் யோசனைகள் நம் தோழிகளின் நலனுக்காக
1.பள்ளி பெண்குழந்தைகளிடம் இது தொடர்பான விழிப்புணர்வை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும்.
2.பள்ளிகளில் இருந்து வரும் குழந்தைகளை பெற்றோர் அவ்வப்பொழுது கண்காணிக்க வேண்டும்.தாய்மார்கள் தனி பொறுப்புடன் கேட்க வேண்டும்.
3.வயது வந்த பெண் குழந்தைகளிடம் தொலைப்பேசிகளை பயன்படுத்துவதை கட்டுபடுத்த வேண்டும் அல்லது கண்காணிக்க வேண்டும்.
4.வீடுகளில் நம்மை சார்ந்தவர்கள் அறிமுகம் இல்லாதவர்களை தொடர்ச்சியாக அழைத்து வருவதை கண்காணித்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.
5.கல்லுரி தோழிகள் காதல் தோழிர்களின் மாயவலைகளில் சிக்கி கொள்ளாது தற்காத்து கொள்ள வேண்டும்.
6.இரவு நேரங்களில் தனியாக ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.
7.அலுவலகங்கள்.மற்றும் பள்ளிகள்.கல்லுரி விடுதிகள்.வீடுகளில் பாலிய துண்டுதல் மற்றும் தொந்திரவுகள் இருப்பின் தயங்காது காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்க வேண்டும்.
8.தோழிகளே ஆடைகளில் மிக கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து செல்வதை முடிந்தவரையிலும் தவிர்க்க பாருங்கள்.(நகரங்களில் வசிக்கும் தோழிகளின் கவனத்திற்கு).
9.தீய பழங்கங்கள் உடைய தோழிகளிடம் இருந்து நட்பை துண்டித்து கொள்ள வேண்டும்.அல்லது அத்தோழியை அப்பழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும்.
10.படித்த தோழிகள் கிராமப்புற படிப்பறிவு அற்ற தோழிகளிடம் பாலிய தொடர்பான குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
11.படித்த தோழிகள் தங்களை பாலிய குற்றங்களில் தற்காத்து கொள்ளும் கரத்தே சண்டை பயிற்ச்சியை கற்றுகொள்ள வேண்டும்.
12.அனைத்து பெண்களும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை தெரிந்து கொள்ள வேண்டும்.
தொகுப்பு;தமிழ் அன்னை பெண்கள் இணையதளம்

எழுதியவர் : (17-Apr-17, 4:52 pm)
பார்வை : 85

மேலே