தாயாகும் தங்கை

ஆயிரம் உறவுகள் வந்தாலும்
அண்ணன் தங்கை போல்வருமா
தாய்மேல் கொண்ட பாசம்போல்
தங்கையும் கொண்டாள் தமயனிடம்
முகத்தை கண்டே குறிப்பறிவாள்
கேட்கும் முன்பே சோறிடுவாள்
அன்னை போலென்னைக் காப்பதனால்
அவளும் எனக்கொரு தாயானாள்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (19-Apr-17, 1:15 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 88

மேலே