மவுனத்தின் வலி

உன் ஆசை காதலை மறந்துவிடு
நீ எனக்கு இல்லை என்பதை உணர்ந்துவிடு

காரணம் இல்லா வெறுப்பினால் என்னை
ஏனடா சுடுகிறாய் .......

நேற்றுவரை எந்த மாற்றமும் இல்லை
இன்று எனக்கு என்று ஏதும் இல்லை

சுவடு படிந்த நெஞ்சில் தொல்லியல் தேடல்
கிடைப்பது நீ மட்டும் தான்

அன்பே அன்பே உன்னை மறக்கவில்லை
மறப்பது என்பதை நினைக்கவும் முடியவில்லை

தோற்றுப்போனேன் தோல்வியில் வாழ்கை
இறங்கி செல்லவும் கற்றுக்கொண்டேன்

உனக்கு என உன்னை விட்டு செல்வது
வலியின் ஆழம் என்று தெரியும்

தெரிந்தும் விட்டு செல்கிறேன்
வலி (வழி) ஏதும் இல்லாமல் ......

எழுதியவர் : வான்மதிகோபால் (19-Apr-17, 1:17 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
Tanglish : mavunathin vali
பார்வை : 206

மேலே