அன்பு கொண்ட இருதயம்

அன்பு கொண்ட இருதயம்

அன்பால் இயங்கும் இருதயம் இது...
அன்பால் துடிக்கும் இருதயம் இது...
அன்புக்காக துடிக்கும் இருதயம் இது...
இருதயம் தேடி இருதயம் ஏங்க,
அன்பால் எழுந்த உணர்வுகள் யாவும் காகிதத்தில் எழுத்துகளாய் பதிக்க மட்டுமே இயலும்....
படித்தால் புரியாது....
இருதயத்தால் உணர்ந்தால் இருதயத்தின் உணர்வுகள் புரியும்....

ஒருவர் மீது கொண்ட அன்புக்குக் காரணமே இல்லாவிடில் அதுவே தூய்மையான அன்பாகிறது....
தூய்மையான அன்பினை உணராது வெறுக்கும் இருதயம்,
என்றும் அறியாது, தூய்மையான அன்பு கொண்ட இருதயத்தின் உணர்வுகளை சந்தேகித்து துடிப்பை நிறுத்த வைக்கும் வேதனை தான் எங்கும் எப்போதும் இரணங்களாய் இருதயத்தைத் தாக்க, இருதயம் பலவீனமானதாகிக் கொண்டே வருகிறதென்பதை உணர முடிகிறதா அன்பே?...

அன்புக்காக அன்பு செய்வதாய் கூறி, அன்பின் வெளிப்பாடென உடல்களைத் தழுவிக் கொண்டு திரியும் இருதயங்களுக்கு மத்தியில் எதையும் எதிர்பாராது அன்பு கொண்ட இருதயங்களும் நம்பிக்கை இல்லாது உடைக்கப்பட்டு உணர்வுகளை வெளிப்படாமலேயே இருதயங்களின் துடிப்புகள் நின்று போகக் காரணமாகிய இருதயங்களெல்லாம் சந்தோஷமாகத் தான் வாழ்ந்திடுமா அன்பே??....

காலம் பதில் சொல்லும்.......


  • எழுதியவர் : அன்புடன் மித்திரன்
  • நாள் : 19-Apr-17, 11:17 pm
  • சேர்த்தது : AnbudanMiththiran
  • பார்வை : 482
Close (X)

0 (0)
  

மேலே