விட்டகலும் வினாடி

"ஹ்ம்..."
உன்னால் உயிர் பெற்ற அன்பிற்கு,
நீயே மரணதண்டனை விதிக்கிறாய்,
விரைந்தும் அதை செயல்படுத்த
நினைக்கிறாய்.

சரியே,

வினயமாக வினாவுகிறேன்
விதியற்றவன் நானென்பதாலா
இத்துனை கொடூரமெனக்கு?

இல்லை இல்லை
விதியோடு விலகாது
விதைக்கப்பட்டவன் இவன்
உன்னுள் விதிக்கப்பட்டவன்
விதிப்படி.
விஷமமது உன்னுள்
விளைந்ததே விஷயம்
வினையம் கொண்டு
விலக நினைக்கிறாய்
நின்னை.

அதுவும் சரியே,

ஆனால் அதற்கான
ஆயுதம் எனதன்பு.
கருவி என் நம்பிக்கை.
படைக்கலம் என் அனுக்கள்.
போர் என் வாழ்வோடு.
சிதைவது என் இருதயம்.
இப்படி என்னுள்
கொடுங்கோள் ஆட்சி
புரிந்தவள் நீ.

மரணதன்டனை விதித்தாய்
இதயதிற்கு,
ஆயுள் தண்டனை கொடுத்தாய்
நினைவாற்றளுக்கு,
மூலமனைத்தையும் நிர்மூலமாக்கினாய்
நியாயமெதுமின்றி.

நிர்கதியாய் நின்றவனுக்கு
நிராயுதபானி என்றொரு பழியும்
இடுகிறாய்..
இட்டுக்கட்டிய அனைத்தும் இயம்பும்
என்றாவது
நிராயுதமாக்கியவள் யாரென்பதை

அன்று உன்னை நீயே
நிந்திப்பாய்.
நினைவிருந்தால் வா.
நிகரற்றவன் இவனாவேன்
அன்றும் உனக்கு.

அஸ்தீர்.

எழுதியவர் : அஸ்தீர் (20-Apr-17, 10:42 am)
சேர்த்தது : அஸ்தீர் ASTHIIR
பார்வை : 298

மேலே