சரும குறிப்புகள்

சரும குறிப்புகள்
================
(before the death )

பிரயாண நிழலின் பல நிறங்கள் சொல்லும், எப்படிப்பட்ட இடத்திலும் கூடும் ஆள்கூட்டத்தில் யாரோ ஒருவர்
மரண வாடையோடு இருக்கிறார், அந்த புண்ணிலிருந்து கசியும் சீழ் அருவம் இங்கெங்கோதான், யாரிடமோ இருந்துதான் வெளிப்படுவதாய் முன்கூட்டியே கருதிக்கொள்ளுங்கள், காலம் சிலப்போது அவர்களை நம்மிடம் அருக வைக்கும், சிலப்போது அவர்களை நம்மிடமிருந்து தூரே யாரென்றுத் தெரியாமலேயே அவர்களுடைய இஷ்டத்திற்கேற்ப மாய்த்துக்கொள்ள உதவுவதாய்ச் சொல்லி சதியில் தள்ளும்.

அந்த மாதிரிகள், நம் அருகில் இருத்தப்பட்டிருக்கலாம், இல்லை நம் அப்போதைய அரைமணி நேர பார்வைக்கு பட்டுவிட்டு பின்னர் அவர்கள் ஒருநாளும் நம் ஓர்மையிலிருந்து அற்றுப்போயிருக்கலாம்.

இதுபோன்ற ஒரு சூழலை, நாம் எங்கிருக்கிறோமோ, நம்மை சுற்றி இருப்பவர்களிடம் ஒரு ஹெலோ சொல்வதன் மூலம், அவர்களுடைய வாழ்வு முடிவின் கந்தக உமிழ்விலிருந்து காத்துவிடமுடியும் என்பது கூட
வெறும் ஒரு நம்பிக்கை மட்டும்தான். நம் முன்னால் ஏற்படப்போகும் ஒரு துர் சம்பவத்தின் நிமிடங்களை
நாம் சொல்லும் ஒரு ஹலோ அற்பநேரம் தள்ளிப்போடும், அந்த நிமிடங்களைக் கடந்தவர்களுக்கு மேலும்
இது மாதிரி எண்ணங்கள் வராமல் போகலாம் இல்லையேல், நம்முடனான அவர்களுடைய சமயம் கழிந்ததும்
அவர்கள் அந்த தைரியத்தை வேறு எங்கோ பிரகடனப்படுத்தி இருக்கலாம்,

எதுவாகினும் அதைச் சொல்ல ஒருவருமின்மையை உணர்த்தும் அழுத்தங்களே முக்கிய காரணம், ஆதலால் எல்லோரும், எங்கு கடக்கும்போதும் அந்த சூழலில் உள்ளவரிடம் ஒரு ஹலோ சொல்லிக்கொள்ளலாமா

1998 , உறவினன் ஒருவன், ரயிலில் சாடி தற்கொலை செய்யலாம் என போய்விட்டு, தெருநாய்களின் குலைத்தல் கண்டு பயந்து
வீட்டிற்குத் திரும்பியிருந்தான்,
அங்கே தெருநாய்களின் ஹலோ, அவனுடைய முடிவை மாற்றவைத்திருக்கலாம்

மரணம்

குழந்தைகள் முதல் பிராயமானவர்கள் வரை, யதார்த்த மரணம் முதல் துர்மரணம் வரை, பலருடைய பேரும்,
ஆதியமும் அவசனமாகியும் பத்தரத்தில் வருவது அவர்களுடைய மரணத்திற்குப் பின்னால் தான், கூட நான் எழுதும் இந்த நாலுவரிகளில் தீரும் ஒரு மனுஷனுடைய ஆயுள்

2003, இப்படித்தான் ஒருமுறை, திருவனந்தபுறம் டூ நிஜாமுதீன் எஸ்பிரஸில் ,, கோவையிலிருந்து நிஜாமுதீன் செல்லவேண்டுமாய் (பழைய டெல்லி) 43 மணித்தியாள பிரயாணம் ...நிஜாமுதீன் இதை அடுத்தே இந்தியா கேட், சாணாக்கிய புரி, சந்திர குப்த மார்க், எல்லா வெளிநாட்டுத் தூதரகங்கள் (Foreign Embassies) அங்கேதான் இருக்கின்றன, சான்றிதழ் சான்றொப்பம் (Certificate Attestation) பெற அங்கேதான் செல்லவேண்டும். நியூ டெல்லி தனியாக இருக்கிறது.

ரயிலில், முதல் வகுப்பு ஏசி அறையில் ரெண்டு லோயர் பெர்த் ரெண்டு அப்பர் பெர்த் இருக்கும், அறையை அடைக்கும் வசதி உள்ளதால் மட்டுமே அது இரண்டாம் வகுப்பு ஏசி சீட்டுகளைவிட பிரதானப்படுகிறது, பெரும்பான்மை ஆட்கள் முதல் வகுப்பு ஏசியில் பயணிப்பதில்லை, அதிக கூட்டங்கள் என்பது வெகேஷன் சமயம், வடக்கிலிருந்து தெற்கில் வேலை செய்துக்கொண்டிருப்பவர்கள் அவர்களுடைய ஏதேனும் பண்டிகை சமயத்திலேயே முதல் வகுப்பு ஏசி அம்மாதிரி நிரம்பும். தனித்த ரயில் பிரயாணங்களை நான் தவிர்ப்பதில்லை, பெரும்பாலான என் டைரியின் பக்கங்களை நிரம்பியவை அவைகள் தான் என்றும் போலில்லாமல், அம்முறை அடுத்திருக்கிற லோயர் பெர்த் பதிவாகியிருந்தது, (எப்போதும் இது சாத்தியமல்ல).

அவள் ஒரு பெண், அப்போது ஒரு 34 வயது காணும், பிரயாணங்களில் அடுத்திருப்பவர்களை யூகிக்கும் பழக்கம் எனக்கு அலாதி, முதலில் கண்ட ஐந்து நிமிடங்கள், அவளை யூகிக்கமுடியுமா என்றது மூளையும் மனமும்,

சாந்தமாய், அன்பின் உருவாய், என்று இப்படி எல்லாம் பொய் சொல்லவிருப்பமில்லை, இந்த சந்தர்ப்பம் இனி எப்போதுமே வரப்போவது இல்லை, இதை எப்படியாவது பயன் படுத்திவிடவேண்டுமே என்கிற அன்றைய வயதை ஒத்த சராசரி ஆண் மனமும் இல்லை, ஆனால் ஆற அமர இருந்து அளவளாவிக் கொண்டு, சில பார்வை சாப்பிட்டு, அவள் சந்தர்பம் கொடுத்தால், அலைப்பேசி எண் வாங்கி, கொஞ்சநாள் கவிதை செய்யலாம், மேலும் நெருக்கமானால், அதைப்பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்ற யூகம், அவளிற்கு வந்த முதல் காலில்
சுக்குநூறாகியது பெங்காலியில் (Ami Okane Asbo, Tarpar Katha Bol Bo - நான் அங்குதான் வந்துகொண்டிருக்கிறேன், வந்து சேர்ந்ததும் பேசலாம் ) என சொல்லிக்கொண்டிருந்தாள் " எனக்கும் பெங்காலி கொஞ்சம் பேசத் தெரியும் " என்ற ஒரு ஆத்ம சமாதானம், kemon acho (எப்படி இருக்கிறாய்), என்று ஆரம்பிக்கலாமா என்பதற்கு முன், அடுத்தடுத்த மணிகள் ஒலித்துக் கொண்டே இருந்தன அவள் அலைப்பேசியில் முடிந்தவரை இல்லை இல்லை
என்பதே அவளுடைய பதிலாக இருந்தது, ஒரு மணி நேர அமைதிக்குப் பின்பு, அவள் அவளொரு விலைமகள் என்பதை அறிமுகப்படுத்த சிறிதும் தயங்கவில்லை, அழுதுக்கொண்டிருக்கிறாள், பதினான்கு மணித்தியாள பிரயாணம் முடிகையில் ராட்சத வேகத்தில் ஆந்திராவை கடந்தேறிக் கொண்டிருந்தன வேகன்கள் .

இப்படி ஒரு பெண் அழுது கொண்டிருப்பதை அதுவும் பிரயாணத்தில் இப்போதுதான் பார்க்கிறேன், பொறுக்கமுடியாமல் அவளே கேட்கிறாள், உன்னருகே ஒருவள் இப்படி அழுகிறாளே, ஏன் என்று
கேட்கத் தோன்றவில்லையா, உன்னை சொல்லி என்ன இருக்கு, எல்லா வயது ஆண்களும் அப்படித்தான்
காமமோ கொலையோ, பெண்ணின் உயிர் உச்சம் தொடும்வரை விடுவதாய் இல்லை, இதிலிருந்து நீ மட்டும்
மாறுபடுவாயா என்ன என்கிறாள், நான் செய்வதறியாமல் எழுந்து அப்பர் பெர்த்திலிருந்த பெட்டியைத் திறந்து
டைரி எடுக்கிறேன், மேலும் அவளிடம் நான்தான் பேசவேண்டும் என்பது அவசியமற்றது, நீ பேசுவதைக் கேட்டால் போதும்தானே பேசு கேட்கிறேன் என்றேன்,,,

பேசுவதற்கு முதலில், அவள் தன் ஆடைகளை அவிழ்த்து அவள் உடலிலுள்ள சரும குறிப்புகளை காண்பிக்கிறாள், ஒரு வளர்ந்த உலகம் இப்படி சிதைந்திருக்காது ஏது பூகம்பத்தாலும் கூட, அப்படி
சிதைக்கப்பட்டிருக்கிறாள், அவள் முன்னால் விதி ஒரு பூகம்பத்தை கொண்டுவரும்போது
நம்மைப்போன்று அவள் பயந்துகொண்டிருக்கமாட்டாள், அத்தனையையும் அவள் சருமத்தில்
கொண்டிருக்கிறாள், இதற்கிடையில் இவளைக்குறித்த அந்தரங்கம் தெறித்த சிலர் எங்கள் வேகனின்
கதவை தட்டி இம்சித்துக்கொண்டிருந்தார்கள், அவளும் இல்ல்லையென்ற பதிலோடே, வருகிறவர்கள்
அவளைப்பார்த்து கெஞ்சிவிட்டு அவள் முடியாது என்னும் பட்சத்தில் என்னையும் பார்த்து
முறைத்துச் செல்வதால், அந்த அறைக்கதவை இழுத்து மூடிவிட்டோம்,

அவளுடைய இப்பிரயாணம் அவளை ஏற்க இருக்கும் அன்றைய "தற்போது காதலன்" வீட்டிற்குச் சென்று அவனிடம் சொல்லிவிட்டு மரணிப்பதில் இருந்தது

முதலில் யாரையோ காதலித்தாள் அவனால் ஏமாற்றப்பட்டாள், பிறந்து பதினாறை எட்டிய மகன்
அவளையே வியாபாரப் பொருளாக்கினான் "காலம் அவனை பண நோய்க்குள் தள்ளிய சாபமாய் இருக்கலாம்

ஹிந்தியிலும் பெங்காலியிலும் பாதிக்குங்கீழ் தெரிந்த மழலைத் தமிழிலும் என

அவளே பேசிக்கொண்டிருக்கிறாள், நான் குறித்துக்கொண்டிருக்கிறேன்,

Cut ,,,,,,,,,,,,,

""அவர்கள் மாறி மாறி என்னை நிரவதி தவணை பலாத்காரம் செய்தார்கள்
ஓரோரு முறையும் அவர்கள் கைக்கொட்டி சிரித்தார்கள்
என் புணர்புழையிலிருந்து தகர்ந்த இரத்தம்
அவர்களை போதையாக்கியது
அது போதாதென்று, ஒரு பெரிய கம்பிப்பாறையை
அவர்கள் குத்தி இறக்கினார்கள்
சுகமா இருக்கா சுகமா இருக்கா ன்னு
இடை இடைக்கு
அவர்கள் என்னைக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்
""சுகமரணமாயிருந்தது ""

Cut ,,,,,,,,,,,,,

எத்தனைப்பேருடைய மரணத்தின் தணுப்பு
என் விரல்கள் ஏற்று வாங்கியிருக்குமோ ?? ,
சிலபோது அவை
என் இதயத்திற்குள் நெரித்தேறும் போல
எல்லா எழுத்தர்களுக்கும்
அவரவருடைய ஸ்ருஷ்டிகளை
மற்றவர்களுக்குக் காண்பிக்க
பயங்கர ஆசையிருக்கும்
என்றால் எனக்கு அப்படி இல்லை
அது அவர்களுடைய சுய வெளிப்பாடு எனினும்,
என்னுடையது
இறந்துகொண்டிருக்கும்
ஆத்மாக்களின் வெளிப்பாடு ஆகும்
ஒவ்வொரு
சரும குறிப்புகளை கேட்டெழுதும்போதும்
ஒவ்வொன்றாய்
கிழித்தெறியும் பேப்பர்களின் மேல் தான்
கோபித்துக்கொள்கிறேன்

Cut,,,,,,,,,

நிஜாமுதீன் சென்றதும், பிளாட்பாரத்தில் இறங்கவேண்டும், அவளால் அவளின் உடமைகளை தூக்கிச்சுமக்க முடியவில்லை, என்னிடம் உதவி கேட்கிறாள்,

நான் பிளாட்பாரத்தில் இறக்கிக் கொடுக்கிறேன், அந்த பிரயாண நிறுத்தத்தில் இறங்கிய, அந்த அறையில் எங்களை கண்ட அனைவரும், Saala Ek ki Aadhmi Mazha Kya Tha, Hum Lokh ka Ek ki Mokka Bhi Nahi Dhya " (பாவிப்பயபுள்ள ஒருத்தன் வச்சு செஞ்சிட்டு வந்திருக்கான், நமக்கெல்லாம் ஒரு வாய்ப்பும் கூட கொடுக்காம) என்று தங்கள் வயிற்றெச்சிலை கொட்டியதற்கு அடுத்தும், அவள் என் முகம் பார்த்து வருந்தியபோதும்,
என்னிடம் உதவி கேட்கிறாள்,

ஜினக்பூர் வரை போக வேண்டும், ஒரு டேக்சி பிடித்து தரவேண்டும், கடப்புப்பாலத்தை கடந்தால், அங்கே டேக்சி கிடைக்கும், நிஜாமுத்தீனிலிருந்து எனக்கு சாணாக்கியா பூரி போக மிக எழுப்பம், ஆனால் அப்பெண்மணிக்கு
அங்கிருந்து ஜினக் பூர் போக அதிக நேரமெடுக்கும் எப்படியோ அன்று அங்குதான் தங்கவேண்டும், என்னுடைய வேலையை முடிக்க ( காலை ஒன்பது மணி முதல் பகல் பன்னிரண்டு மணிவரை நேரமிருக்கு சான்றிதழைக் கொடுத்துவிட்டால் மூன்று மணிக்குச்சென்று பெற்றுக்கொள்ளலாம், தற்போது மணி காலை 6:15) அவளுடைய சுமையினையும் சுமந்து பாலம் கடந்துவிட்டு ஒரு டேக்சி எடுத்து, அவளுடன் நானுமாய் ஏறிக்கொண்டோம்,
ஜினக்பூர் சேரும்போது மணி ஏழைக் கடந்திருந்தது, அவளை அங்கே இறக்கிவிட்டு நானும் டேக்சியுமாய் திரும்பியபோது, மேலும் கைக்காட்டினாள், டேக்சியை ஸ்லொவ் செய்துக்கொண்டு, என்னங்க ஏதும் வேணுமா என்று கேட்கிறேன், அவள் ஏதும் வேண்டாமென்று தலையசைத்து செயகையால் பதில் கொடுக்கிறாள்,
ஒருமுறை கைய்யெடுத்து கும்பிட்டுவிட்டு, முதல் முறையாய் ஒரு ஆம்பளையைப் பார்க்கிறேன் என்றாள்,

நான் அவ்வளவு ஒன்றும் நல்லவனில்லைதான், ஆனாலும் சுயநலவாதியுமில்லை, அவளின் அந்த வார்த்தையில் மனது லேசானது, வந்த வேலையும் நன்றாகவே முடிந்தது.

எனக்குத் தெரியவில்லை, அவள் இப்போது மரித்துவிட்டாளா என்று, ஆனால் என் நம்பிக்கை சொல்கிறது, அவள் எங்கோ நல்லவிதத்தில் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பாள் என்று,


நன்றி - பூக்காரன் கவிதைகள்

எழுதியவர் : அனுசரன் (20-Apr-17, 2:09 pm)
பார்வை : 131

மேலே