உதவிக்கு உயிர் கேட்டு

(தமிழக விவசாயிகள் சார்பாக தில்லியில் 37 நாட்களாக தொடர் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்காக )

காயும் பூவும் கழனி விட்டு தில்லியில் காயுதம்மா
காயம் பூசும் கடன் விட மல்லிகை கேட்குதம்மா
குரல் கலந்த காத்து உதவிக்கு உயிர் கேட்டு
கூடி கூடி பகல் இரவுகள் குருவிகள் கத்துதம்மா
அம்மம்மா அரசம்மா மொளனம் இனி விட்டுக்க ம்மா

பச்ச பயிர் பசிச்சிருக்குது
மிச்ச உயிர் கரிஞ்சிருக்குது
வட்டிகடன் போட்டு
ஏர் கலப்பை ஏக்கம் கொண்டது
ஏளனமும் ஏணியிலே
ஏறுவதைப் பார்த்து

பூமியிலே இந்தியன்தான்
பூமா தேவி சந்ததிதான்
காலம் ஒன்னு காத்திருக்கு
கறி வேப்பிலைக்கும் வாழ்விருக்கு
கூடி கூடி துதி பாடி பாடி ஓடி ஓடி வா வாழ்வே
அம்மம்மா அரசம்மா அச்சமும் எதுக்கும்மா

கீரை வித்து தாரை விட்டு வேர் பிடித்து தாண்ட வேண்டும்
மோரை வித்து காரை வாங்கும் நிலை வர வேண்டும்
கோரப் பட்டு கோடி நட்டு கொடி கட்ட வேண்டும்
அரச மரக்கிளையை மறக்கும் நினைவு வர வேண்டும்
அச்சமின்றி மிச்சமுள்ள பூக்களும் பூக்கட்டுமே
பச்சையின்றி பாரதம் இல்லையென்ற நிலை
பஞ்சம் தீர்க்க லஞ்சம் தந்து அரசாங்கம்
எம்மிடம் பிச்சை கேட்கும் நாள் வருமே..!

சோறு சோறு என்று நீரு நீரு என்று இப்போது
அசையாத முண்டங்கள் அசைவற்றுப் போகட்டுமே..!
அம்மம்மா அரசம்மா மொளனம் இனி விட்டுக்க ம்மா

எழுதியவர் : செ.பா.சிவராசன் (21-Apr-17, 11:56 pm)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
Tanglish : udavikku uyir kettu
பார்வை : 672

மேலே