இதயமாகிய நான் பேசுகிறேன் அன்பே

இரும்பாலான இருதயம் அல்ல இது...
இரும்பென்றால் இருதயத்தில் எரியும் நெருப்பால் இந்நேரம் உருகியோடியிருக்குமே அன்பே...

இரத்தமும், சதையும் சேர்ந்தே உருவாகிய இந்த இருதயத்தில் கொளுந்து விட்டெரியும் அந்த நெருப்பை அணைய விடாது, அற்புதமாய் இயக்கி உயிர் சோதியை ஒளிரச் செய்கிறாயே அன்பே....

காற்றே சுவாசமாகி உயிர் வாழ்கிறேனென்ற நம்பிக்கை தர,
நிலமே சுமைதாங்கியாய் என்னை சுமந்து நம்பிக்கை தர,
அந்த நம்பிக்கையின் அடிப்படையாய் அன்பே நீ இருக்க, எதிலும், எப்பொழுதும் உன்னையே காண்கிறேன் அன்பே....

இருதயங்களெல்லாம் தத்தம் வாழ்க்கைத்துணை இருதயங்களைத் தேட, இந்த இருதயம் மட்டும் வாழ்க்கைத்துணையாக அன்பே உன்னால் நிறைந்த இருதயம் தேடினேன், எங்கும் கிடைக்கவில்லை....

கனவு கண்டேன், என் இருதயத்திற்கு அவள் துடிப்பாகவும், அவள் இருதயத்திற்கு நான் துடிப்பாகவும் இருக்க வேண்டுமென....
எல்லாம் பகல் கனவு தானென்று நடைமுறை உணர்த்த ஏதோ ஞானம் பெற்றவனாய் வாழ்க்கைத் துணை தேடலையே துறந்தேன் அன்பே....

பகவத் கீதையில் சொன்னாற்போல் எனது சிந்தனை தெளிந்து துறவறமேற்று பிரம்மச்சரிய வாழ்வை மேற்கொள்ள சித்தம் கொள்கிறேன் அன்பே.....

எது நிகழுமென காலமே பதில் சொல்லும்.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Apr-17, 12:41 am)
பார்வை : 661

மேலே