புன்சிரிப்பு

புன்சிரிப்பு!
இன்று...
நம் தாழ்வாரத்துக் கூரையில்
மலர்ந்திருந்த முல்லைப் பூக்கள்
தாறுமாறாய் பயிற்சி செய்திருக்கிறது,
உன் புன்சிரிப்பு போல் சிரிப்பதற்கு!
கீழே பார், எவ்வளவு உதிர்ந்து கிடைக்கிறது,
அளவாய் சிரிப்பது எப்படி என்று
கற்றுக்கொடு, முல்லைக்கொடிக்கு, புன்சிரிப்பு!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (22-Apr-17, 3:27 pm)
Tanglish : punsirippu
பார்வை : 152

மேலே