அற்றை திங்கள் அந்நிலவில் 1

காலை மணி 11 . அல்லி யின் போன் அம்முவின் அழைப்பு
அல்லி :ஹாய் அம்மு எப்படி இருக்க?
அம்மு: நல்லா இருக்கேன் அல்லி. நீ எப்படி இருக்க?
அம்மு: குட். சரி அம்மா அப்பா எப்படி இருகாங்க?
அல்லி: நல்லா இருக்காங்க டி. உன் தொல்பொருள் ஆராய்ச்சிலம் எப்படி போய்ட்டுருக்கு?
புதுசா ஏதாவது கிடைச்சுதா?
அம்மு:நல்லா போகுது. இது பாண்டிய காலத்துல இருந்த மக்கள் பகுதின்னு கண்டுபிடிச்சுருக்காங்க.
இன்னும் தகவல் கலெக்ட் பணித்திருக்கோம்
அல்லி : சரி டி. அம்மு நேத்தைக்கும் அந்த கனவு வந்துச்சு டி
அம்மு: மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா? என்ன வந்துச்சு? அதே ஆத்தங்கரையும் நீயும் அவனும் தான?
அல்லி: உனக்கு கிண்டலா இருக்கா? என் பீலிங்ஸ் உனக்கு புரியலையா டி. நீ எல்லாம் எப்படி தான் என்ன
கூட பிறந்தியோ?. இதுல நாம இரட்டையர்கள் வேற. போடி.
அம்மு : சரி கூல். இதே சீன் தான எப்போதும் வருது. நீ முகநூல் ல ஒருத்தன லவ் பண்ணிட்ருக்கியே.
அவனை சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டு அதே ஆத்தங்கரைக்கு போவேண்டிதானே.
அல்லி: கல்யாணம் தான பண்ணிடலாம். சரி ஒர்க் இருக்கு. அப்பறமா கூபிட்றேன்.
அம்மு: ஒகே. பை

ஆமாங்க . அல்லி அம்மு இரட்டையர்கள். ஒரு தம்பியும் இருக்கான். அப்பா க்கு பூர்வீகம் மதுரை. இப்ப ஒர்க் பண்றது சென்னைல. அம்மா கு பாலக்காடு. ஒரே ஆபீஸ் ல ஒர்க் பண்றப்ப கல்யாணம். குடும்பத்தில ஒரே சண்டை. யாரும் சம்மதிக்கல. அவங்களும் 23 வருஷமா குடும்பத்தோட ஒரு தொடர்பும் இல்லாம இருக்காங்க. அம்மு தொல்பொருள் ஆராய்ச்சியாளாரா இருக்கா. அல்லி சாப்ட்வேர் என்ஜினீயர். தம்பி ஆகாஷ் ஸ்கூல் படிக்கிறான். ரொம்ப ஜாலியான பேமிலி. ஆனா அல்லி ஒருத்தர ஒன் சைடு லவ் பணித்திருக்க. அவன் வீர் . அமெரிக்கால எஞ்சினீரா இருக்கான். முகநூல் பழக்கம். புகைப்படம் மட்டும் பாத்திருக்க. நேர்ல பாத்துக்கிட்டது இல்லை. அவனும் இவளை விரும்புற மாதிரி தான் அல்லிக்கு டவுட். அம்மு இப்ப அப்பாவோட சொந்த ஊரான மதுரைக்கு போயிருக்கா. அங்க பாண்டியர் காலத்தோட ஒரு மக்கள் குடியிருப்பு கண்டுபிடிச்சருக்காங்கன்னு அவளுக்கு அங்க ஒர்க் போட்ருக்காங்க. சரி மேல கதையா படிங்க.

இடம் : மதுரை

அம்மு அந்த ஊருக்கு வந்து மூணு நாள் ஆச்சு. அந்த இடம் அவ அந்த ஊருக்கு புதுசு இல்லை அப்டிங்கற ஒரு எண்ணம் தந்தது. சரி அப்பாவோட ஊர் ஆச்சே அதுனாலய இருக்கும் னு நெனச்சுகிட்டா. சாயங்காலம் நான்கு மணிக்கு மேல அந்த கிராமத்தை சுத்தி பாக்கலாம்னு கிளம்பினா. அவ கூட மீனு னு ஒரு பொண்ணு. அவ அந்த கிராமத்தில உள்ள பொண்ணு. பக்கத்துல சுருள் கு போகலாம் னு மீனு கூட்டிட்டு போனா. ஆனா கொஞ்ச தூரமா போனதும் அம்மு சொன்னா இப்டி போனா ரொம்ப தூரம் அப்டி போகலாம்னு ஏதோ ஒரு வழியில் மீனாவை கூட்டிக்கொண்டு சென்று நிமிடத்தில் கோயிலை அடைந்தார்கள். மீனு கு ஒரே ஆச்சர்யம் அக்கா உங்களுக்கு எப்படி எங்க ஊரு வழில்லாம் தெரியும்?
அம்மு: நீ தான என்ன கூட்டிட்டு வந்த. என்கிட்ட கேக்கற?
மீனு: அக்கா விளையாடாதீங்க நீங்க தான என கூட்டிட்டு வந்தீங்க?
அம்மு: இல்ல மீனு எனக்கு தெரியல. ஏதோ மறந்து போனது போல இருக்கு. நாம வீட்டுக்கு போலாம் வா
மீனு: அக்கா போலாம் ஆனா நான் சொல்ற மாதிரி என் கூட வாங்க. நீங்க வந்த பாதைல
போகக்கூடாதுனு எங்க வீட்ல இருக்கவங்க சொல்லுவாங்க
அம்மு: சரி

அன்று இரவு ...
அம்முவின் கனவில்
அந்த அரண்மனை... அதில் மேல்மட்டத்தில் அம்மு. யாரையோ ரசிக்கிறாள். யார் அது?
அந்த குதிரையின் மேல் வருவது அத்தான் அல்லவே? ஆமா அவர் தான். என்ன மிடுக்கான நடை. என்ன பார்க்காதான் வருவாரு. ஆனா சொல்லமாட்டாரு. திடீர்னு என்ன இது என் தலை வலிக்குதே. சட்டென்று கனவில் இருந்து எழுந்தாள் அம்மு. என்னது இது இப்டிலாம் கனவு. எல்லாம் அந்த அல்லி ஏதேதோ கதை சொல்லி நம்மளையும் யோசிக்க வச்சுட்டா என முணுமுணுத்தவாரே மீண்டும் படுத்து உறங்கி போனாள் அம்மு.

எழுதியவர் : (22-Apr-17, 4:18 pm)
சேர்த்தது : ஸ்ரீஸ்
பார்வை : 408

மேலே