பிரியாணி வெஜ் or நான்வெஜ்

கோழியை வெட்டிப் போட்டால் சிக்கன் பிரியாணி
காய்கறிகளை வெட்டிப் போட்டால் வெஜ் பிரியாணி
வெஜ் பிரியாணி சைவம்;நான் --வெஜ் பிரியாணி அசைவம் .
நான் --வெஜ் பிரியாணி சாப்பிட்டால் பிராணிகளுக்கு மோட்சம் .
வெஜ் பிரியாணி சாப்பிட்டால் சாப்பிட்டவனுக்கு மோட்சம் .
சைவத்திற்கு கைலாசம் !
இதைப் பாரய்யா நான் வைணவம் எனக்கும் கைலாசமா ?
நீ சாப்பிடறது சைவமா அசைவமா ?
நான் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் வைணவம் தான் .
ஐயோ இவன் ட்ராக்கையே மாத்தறானே !
கேட்டுக் கொண்டிருந்த பெரியவர் சொன்னார்
சைவம்னா கைலாசம் வைணவம்ன்னா வைகுண்டம்தானே ?

இது எங்களுக்குத் தெரியாதா ! வெஜ் பிரியாணி சைவமா வைணவமா ?

போச்சுடா ! பிரியாணின்னா அது நான் --வெஜ் . தான்
வெஜ் --பிரியாணி ன்னு சொல்லறதும் செய்யறதும் சாப்பிடறதும் தப்பு
அவங்களுக்கு கைலாசமும் இல்லை வைகுண்டமும் இல்லை நரகம் தான் !

என்ன !!!!!

அப்பிடின்னா எங்களுக்கு எந்த லோகமும் இல்லையா
என்று கேட்டார் ஒரு நான் வெஜ் பிரியாணிப் பிரியர் .

உங்களுக்கு வானத்து சொர்க்கமெல்லாம் எதற்கு ?
பூமியில் இதுவே சொர்க்கம் தானே ! என்றார் பெரியவர்

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-17, 10:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 291

மேலே