சொல்லும் பொருளும் 5 - உலை, உளை, உழை

சொல்லில் ஒரு எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடும்; ஒரு சொல்லுக்கே பல பொருள் உண்டு. எனவே உதாரணத்திற்கு உலை, உளை, உழை என்ற மூன்று சொற்களை இங்கு பார்ப்போம்.

உலை

1. Smith's forge or furnace; கொல்லனுலை. கொல்ல னுலையூதுந் தீயேபோல் (நாலடி 298)
2. Fireplace for cooking, oven; நெருப்புள்ள அடுப்பு
3. Pot of water set over the fire for boiling rice; சோறு சமைத்தற்காகக் கொதிக்க வைக்கும் நீர். உலைப்பெய் தடுவது போலுந் துயர் (நாலடி 114)
4. Flurry, excitement, agitation; மன நடுக்கம். உலைதருமலின மொன்றதொழித்திடுஞ் சுத்தமொன்றே (ஞானவா. வைரா. 26)

உளைதல்

1. To ache or suffer pain in the limbs, as from weariness, cold, rheumatism; குடைச்சல் நோவடைதல். கால் உளைகிறது.
2. To suffer griping pain, as with dysentery; வயிறுளைதல்
3. To travail; பிரசவ வேதனைப்படுதல்.
4. To suffer in mind, to be in distress; to touch deeply; மனம் வருந்துதல், உளையச் சொன்னான். (கம்பரா. கையடை. 10)
5. To perish; to be destroyed; அழிதல். உளையா வலியொல்க (தேவா. 570, 8)
6. To be defeated, vanquished; தோற்றல். சுடருக் குளைந்து (திவ். இயற். திருவிருத். 69)
7. To disperse, scatter; to be diffused; சிதறிப்போதல். காலுளைக் கதும்பிசி ருடைய வாலுளை (பதிற்றுப் 41, 25)
8. To howl, as a jackal; ஊளையிடுதல். நரியுளையும் யாமத்தும் (திணைமாலை. 113)

உளைத்தல்
உளை.
1. To afflict torment, make sorrowful; வருத்துதல். மாலை யென்னுயி ருளைப்பதும் (கல்லா. 70, 31).
2. To dislike; வெறுத்தல். உளைத்தவர் கூறு முரை யெல்லா நிற்க (பு.வெ. 12, இருபாற். 14).

உளை

1. Mane, esp. of a horse or lion; குதிரைசிங்கம் முதலியவற்றின் பிடறி மயிர். பல்லுளைப் புரவி (நெடுநல். 93).
2. Man's hair; ஆண்மயிர். (சூடா) உளை பசுங்கொடியின் வீக்கி (இரகு. தேனுவ. 34).
3. Head; upper part; தலை. மிசை யல்ங் குளைய பனைப்போழ் செரீயி (புறநா. 22, 21)
4. Hair plume on a horse's hed, cāmara; குதிரையின் தலையாட்டம் என்னும் அணி. பரியுடை நன்மான் பொங்குளை யன்ன (ஐங்குறு. 13)
5. Mud, mire; சேரு. கரமுளை யிழையிற் போக (பிரமோத். 6, 20)

உளைத்தல்

1. To sound, roar; ஒலித்தல். கடலுளைப்பதும் (கம்பரா. நட்பு. 45).
2. உளை To howl, as a jackal; ஊளையிடுதல். உலப்பிலின்பமோ டுளைக்கு மோதையும் (மணி. 6, 111)
3. To give forth a sound, To call, invite; யாழ் ஒலித்தல் (திவா.) அழைத்தல். (திவா.)

உளை

1. Sound; ஒலி. (பிங்.)
2. High tone of voice; எடுத்தலோசை. (பிங்)
3. Weeping, அழுகை. உளையிட்டுப் புலம்பி யோட (பெரியபு. திருஞான. 638).

உளை

Inarticulate sound; எழுத்திலாவோசை. (நாநார்த்த)

உழைத்தல்

1. To labour hard, toil, drudge; பிரயாசப்படுதல். உழைத்தால் உறுதியுண்டோதான் (திருவாச. 33,1)
2. To suffer hardship, to be afflicted; To earn; வருந்துதல். வலையிற்பட் டுழைக்கின்றேற்கு (திவ். திருமாலை, 36) சம்பாதித்தல். அவன் மாதம் பத்துரூபா உழைக்கிறான்.

உழை

1. Place; இடம். உழைதங்கட் சென்றார்க்கு (நாலடி, 167)
2. Deer; மான். உழையாடுகரதலமொன்றுடையான் (தேவா. 234, 7)
3. Petal of a flower; பூவிதழ். வாலுழையெருக்கமும் (கல்லா. 19)
4. Fourth note of the gamut; மத்திமசுரம். (திவா)
5. A string of the yāḻ; A loc. ending; By the side of; யாழினொரு நரம்பு. (பிங்.) ஓர் ஏழனுருபு (நன். 302.) பக்கத்தில். நங் கேள்வ ருழைவந்தார் (பு. வெ. 10,3)

உழை

1. One of the wives of Sūrya; சூரியன் மனைவிகளுள் ஒருத்தி. உருக்கொள் சாயையு முழையும் (பாரத. சம்பவ. 34)
2. Dawn; வைகறை. (சங். அக)
3. Name of the daughter of Bāṇa; வாணாசுரன்மகள். (சிலப். 6, 54, உரை)

உழை

Cow; பசு. (நாநார்த்த)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Apr-17, 12:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13202

சிறந்த கட்டுரைகள்

மேலே