சிரிப்பில் கள்ளம் முகத்தில் நாணம்

சிரிப்பில் கலந்திருக்கும் கள்ளம்
முகத்தில் மொய்த்திருக்கும் நாணம்
களவாய் அவன் கன்னத்தில்
முத்தமிட்டுச் சென்றானோ?
இன்ப நினைவுகளை
அசை போடுகின்றாளோ ?

செங் கம்பள
வரவேற்பு யாருக்கு
இந்த சிவப்புத்
துப்பட்டா மூலம்
மீண்டும் அவனை
அழைக்கும் உத்தேசமோ

ஏன் வெண்முத்துக்களை
இதழின் இடையே
ஒழித்து வைத்திருக்கிறாள்
போலீஸ் கெடுபிடியோ

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (23-Apr-17, 4:17 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 291

மேலே