இறைவனை நினைந்து கடமையை செய்

உன்னையன்றி வேறொன்று அறியேன் பராபரமே...
என் எல்லா நிலைகளிலும்
உன்னுடன் இருக்கவே
மனம் நினைக்கிறது இறையே.....

இயற்கையும் இசையும் இறை என்பேன் .....
அதை ரசிக்க நானும்(நாளும் ) பிறந்தேன் (வாழ்கிறேன் )......
(அதை நாளும் ரசிக்க(ரசித்து) வாழ்கிறேன் ).....

என்ன ஒரு இலக்கணம் இந்த கவிதை ......
எதுவுமே இல்லையே என்ன சொல்ல .....
சொல்லில் முடியாதது இந்த கவிதை .....
சொன்னாலும் விளங்குவதில்லை வண்ண கவிதை
எதுவுமே இல்லாமல் எழுதுகின்றேன் .....
ஆகாயத்தில் பறவையாய் பறக்கின்றேன்......
எவ்வளவு நேரம் தான் இப்படியே எழுதுவேன்
வர்ணனை எதுவுமே இல்லாமலே .....

வர்ணனை வைத்து கவி படைக்கவோ .....
வர்ணனை என்றால் என்ன ?
தினமும் பார்க்கும் யாவிலும் அடங்கும் இயற்கை .....

காற்றடிக்கும் நேரம்
மின்னல் வெட்டியது
இலைகள் பனியை சிந்தியது
தூவானம் சொர்க்கமாய் அருகில் வந்தது
மாலை நேரத்து மரகத காடு
மழைக்குள்ளே என்னை சுமந்து
மழலை போல் மான் குட்டி துள்ள
கிளிப்பிள்ளை கொஞ்சும் தமிழ் பேச
அருவியில் ஆட்டம் போட
அப்படியே காற்றோடு ஒரு பாட்டும் பாட
அப்பப்பா என்ன ஒரு ரம்மியமான காட்சி
கண்ணோடு நின்று விடுகிறதே
இது வர்ணனையா வெளிப்படையா
கற்பனையா கவிதையா
இது யாவுமே இல்லை
இவை எல்லாம் இயற்கை .....

~ பிரபாவதி வீரமுத்து
தலைப்பு :
டக்குனு தோன்றியது .....
என் பள்ளி ...இலச்சினை மற்றும் முகப்பு வாயில் ஏந்தியிருக்கும் வாசகம்....

இறைவனை நினைந்து கடமையை செய்
தேசிய மேல்நிலை பள்ளி , திண்டிவனம்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-Apr-17, 6:12 pm)
பார்வை : 93

மேலே