அழிப்பது வேதனை தான்

இனம் இனம் என்று கூறி
ஈன செயலில்
ஈடுபடும் மனித இனம்
தன்னைத் தானே
அழித்து மடிய
அரசியலும், ஆணவமும்
தானே காரணம்

பூமியில் பிறப்பெடுத்த
ஏது விலங்கினமும்
தன்னினத்தை வெறுத்து
அழித்துக்கொள்வதில்லை
நாயைத் தவிர,
அது தன்னினத்தை வெறுக்கும்
மனித இனத்திடமிருந்து
கற்றுக் கொண்டதால்

சிந்திக்க தெரிந்த மனிதன்
சிந்திக்க மறந்து
விலங்கைப் போல் ஆனாலும்,
விலங்குகள் தன்னினத்தை
வீனாக அழித்து
மடிவதில்லை என்பதை
உணரவேண்டாமோ?

மனித இனம் போல்
மண்ணில் உயர்ந்த இனம்
வேறு ஏதுமில்லை,
ஆக்கவும், அழிக்கவும்
அறிந்த மனிதன்
தன்னினத்தைத் தானே
அழிப்பது வேதனை தான்.

எழுதியவர் : கோ. கணபதி. (24-Apr-17, 7:33 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 81

மேலே