நடிகையின் உத்தம ரசிகனின் ஏக்கம்

விளம்பரத்தில் என் அபிமான நடிகை தேய்ச்சு
குளிக்கும் சோப்பை வாங்கிக் குளிக்கத் தோணுது
பல்லை இளிச்சு இளிச்சு அவ வாங்கச் சொல்ற
பற்பசையை வாங்கி பலதேய்க்கத் தோணுது
அவ ஆட்டோகிராப் போட்டு அனுப்பிய அவ போட்டோவை
பார்த்துக்கிட்டே இருந்தா பொழுது சொல்லாமலே போகுது !
திருமணமாகி போயி ஒரு வருஷத்திலே
அவனை ரத்து செய்து இன்னொருத்தன கைபிடிச்சா
கைப்பிடித்த அவனையும் விட்டுவிட்டு இன்னொருத்தனோடு வாழ்ந்தா
இப்போ மதம் மாறி இன்னோருத்தனுக்கு கணையாழி போடப்போறதா ஒரு கிசு கிசு
இப்படி அவ போகிற போக்கிலே நம்ம டர்னும் வராதான்னு
ஒரு நாப்பாசை இடையிடையே வந்துட்டுப் போகுது !
என்ன செய்யுது எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும் ....ம்

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Apr-17, 6:31 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 248

மேலே