தோழிக்கு ஒரு பாடல்

உங்கள் நண்பன் பிரகாஷின்
163 ம் படைப்பு.....

என் தோழிக்கு ஒரு பாடல்...

தோழியே! உயிர் தோழியே!
தோற்றுவிட்டேன் உந்தன் நட்பிலே......!

சகியே! என் சகியே!
சாய்ந்துவிட்டேன் உந்தன் அன்பிலே.....!

வீழ்ந்துவிட்டேன் உன் மனதிலே.....!

இனி வாழ்ந்துவிட்டேன் உன்னிலே......!
வீ(2)

உன்னோடு மட்டும் இருந்தா போதும்
உலகை மறப்பேனே....!
நானும் உலகை மறப்பபேனே.....!

உன் நட்பை மட்டும் காதல் செய்து
மீண்டும் பிறப்பேனே......!
மறு ஜென்மம் எடுப்பேனே....!

உன்னை மட்டும் தான்
என் உயிர்தோழி என்பேனே.....!
உயிர்தோழி என்பேனே....!

உனக்காக மட்டும் தான்
இந்த உயிரையும் கொடுப்பேனே.....!
என் உயிரையும் கொடுப்பேனே.....!

( தோழியாக நீயும் வந்தாய்!

தொப்புள்கொடி உறவு ஆனாய்.....!

சகியாக நீயும் வந்தாய்!

என்னை சாய்த்து நட்பில் வென்றாய்.....!

அடி!
தொட்டு தொட்டு
போனது! உந்தன் நினைவு....!

முட்டி முட்டி
வந்தது! இரவில் கனவு....!

சொக்கி சொக்கி
நின்றது! எந்தன் மனது....!

என்னை வென்று
சென்றது! அடி! உந்தன் நட்பு....! )
(தோழியே)


தப்பு என தெரிஞ்சாலும்
என்னை தண்டிக்க மாட்டாயே....!

என் frnd னு சொல்லிட்டு
யாருக்கும்
என்ன விட்டு கொடுக்க மாட்டாயே....!

என் வாழ்க்கையிலே....!

தவமாய் வந்தவள் நீ தான்.....!

என் மனதினிலே.....!

தகராறு செஞ்சவள் நீ தான்....!

நட்பு என்னும் கோவில் தான்

கட்ட வேண்டும்! நான் உனக்கு...!

அன்பே! உன்னை மறக்க மாட்டேனே....!

மறந்தாள்! இனி மண்ணினில் வாழ மாட்டேனே.....!

(தோழியே)

உந்தன் நட்பை எண்ணி தான்
இந்த நாளும் போகுதே......!

உனக்கு கவிதை எழுதி தான்
பேனா மையும் தீருதே.....!

உன்னை தினமும் காண தான்
இரு கண்களும் தேடுதே....!

உன்னை காணத நாளில் தான்
என் மனமும் வாடுதே....!

நம் நட்பின் ராகம் தான்
என் நெஞ்சினில் ஓடுதே....!

அது உந்தன் புகழை மட்டும் தான்
என்றும் பாரில் பாடுதே....!

( விதி மாறியும்,
மதி மாறாத தப்பு......!
கடவுள் அளித்த
கொடை இந்த நட்பு.....! )


Timepass writer...
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (25-Apr-17, 7:11 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : thozhiku oru paadal
பார்வை : 683

மேலே