ஒரு ஆண் மகனின் வலி

ஓர் யாம வேளையில் யாரென்று தெரியாத பெண்ணிடம் சென்றேன்.

நேற்றும் நாளையும் வராத
என் இன்றைய இரவுக்கான நிலவு அவள்......

பெயர் ,ஊர்,ஜாதி,படிப்பு
எதுவும் தெரியாது...
அவள் ஒரு பெண்ணாகவும்
நான் ஒரு ஆணாகவும் மட்டும் இருக்கிறோம் இங்கு.

ஊர் உலகம் பல பெயர் வைத்திருந்தது அவளுக்கு,

அவளோ தொழில் என்பாள்,

நாகரீகம் அவளுக்கு வைத்தபெயர்
"விலைமகள்"


அவள் தோள்களை தொடுகிறேன்

பெண்களுக்கே உரியாதான அந்த வெட்கம் எள்ளளவும் தோன்றவில்லை அவள் முகத்தில்.

அவள் தேகத்திலிருந்த தலும்புகளும், நககீரல்களும்
கூறின
மனிதனின்
மற்றோரு பசிக்கு இரையாகி கொண்டிருக்கும் அவள் வாழ்வை பற்றி..

சாறு பிழிந்த எலுமிச்சை பழத்தோலாய் தோற்றமலிக்கிறாள்.

வலி,வேதனை,கவலை,கண்ணீர் இவைதான் அவள் மண்ணிற்கு வருகையில் வாங்கி வந்த வரங்கள் போல......

பாசம்,காதல்,லட்சியம்,மகிழ்ச்சி இப்படி எத்தனை ஏங்கங்களும்,ஆசைகளும் இருக்கிறதோ
அவள் மார்புக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மனதிற்குள்.....

தினமும் அவளிடம் ஆண்களை அனுப்பிய விதி

"பாசத்தை பொழியும் தந்தை"

"கண்டிப்பை காட்டும் அண்ணன்"

"உலகை மறக்க வைக்கும் காதலன்"

"உலகேயே தனதாக்கும் கணவன்"

இந்த நான்கில் ஒரு ஆண்மகனை
அவள் வாழ்வில் அனுப்பிருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும் அவள் வாழ்வு ..

விதைக்கும் உழவன் கையிலிருந்து நடைபாதையில் தவறி விழுந்த விதையாய் அவள் விழிந்திருக்கிறாள் இம்மண்ணில் ..

தோள்களை தொட்ட கையை எடுத்து அவளைவிட்டு செல்கிறேன்...

வருங்கால மனைவிக்கு ராமனாக வேண்டுமென்றோ
நான் நல்லவன் என்ற மன உருத்தலிலோ அல்ல ...

அப்பெண்ணை அதற்குமேலும் சதையாக பார்க்க மனமில்லாததால்.....

என்னையறியாமல் என் கண்கள் சிந்திய துளிகளை துடைத்து விட்டு

கடவுளிடம் சத்தமிட்டு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் இனி இப்படி ஒரு தவறு உன் படைப்பில் வேண்டாமென்று.....

("ஒருவேளை கடவுளின் காது செவிடாகமலிருந்தால் இனி தோன்றாது விலைமகள் என்னும் வார்த்தை இம்மண்ணில்")

-பா.அழகுதுரை

எழுதியவர் : பா.அழகு துரை (25-Apr-17, 9:27 am)
சேர்த்தது : பாஅழகுதுரை
Tanglish : oru an maganin vali
பார்வை : 388

மேலே