பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்

ஆண்களின் சபிக்கப்பட்ட வாழ்வாக இருக்கும்.மாயை உலகாக இருக்கும்!
காற்று வெளிநடப்பு செய்யும்!மழை மறுபரிசீலனை செய்ய மறுக்கும்!நிலா நிலைத்திட மறக்கும்!பூமி பந்து வெறுமை ஆகும்!

பெண் என்பவள் உலகத்தின் எட்டாம் அதிசயம்.அவள் சொற்கள் கல்லுக்குள் இருக்கும் ஈரத்தையும் ஊற்றெடுக்க செய்யும்.

மனித உடல் 45 யூனிட் வரை வலிகளை தாங்கும்.அனால் பிரசவ காலத்தில் ஒரு பெண் 57 யூனிட் வரை வலிகளை தாங்கி மரணத்தின் கால்கள் தொட்டு புது உயிரை இந்த பூமிக்கு தருகிறாள்.

ஒவ்வொரு பெண்ணும் ஒரு படைப்பாளி.பெண்ணுக்கு அடையாளம் தாய்மை மட்டுமல்ல!
தன் வாழ்க்கையில் சொல்லமுடியாத துயரங்கள் சந்திப்பவள்.1 வயதில் வாழ்வு சாவா? என்ற நிலையை தாண்டுகிறாள்.
பெண் பூமியின் அதிர்ஷ்டம்.

5 வயதில்,நீண்ட விவாதத்திற்கு பிறகு பள்ளிக்கூடம் அவளை பரிசீலனை செய்கிறது!
பெண் ஒரு அறிவுபெட்டகம்!

16 வயதில் படிப்பா அடுப்பா? என்ற பட்டிமன்றத்தில் பங்கெடுத்து ஜெய்கிறாள்.
பெண் ஒரு சிந்தனைவாதி!

22 வயதில் மனித மிருகங்களின் பசியிலிருந்து தினம் தினம் தப்பி பிழைக்கிறாள்!உலகத்தோடு போராடுகிறாள்.
பெண் ஒரு போராளி!

25 வயதில் பெற்றோர் சொல் ஏற்று திருமணம் புரிக்கிறாள்.
பெண் பொறுமையின் அம்சம்.

40 வரைக்கும் தன் குழந்தைகளுக்கு புதிய உலகத்தை செல்லிதருக்கிறாள்!
பெண் ஒரு சிற்பி!

60 களில் மகள் வீட்டு தில்லையில் அமர்ந்து பழைய கதை நினைத்து பார்க்கிறாள்.
தன்னுள் வீருட்சமாய் கிடந்த
திறமைகள் ஒவ்வொன்றும் பல பெண்களின் வாழ்க்கையில் மண்ணுக்கு உணவகின்றன.
பெண் ஒரு சாகாப்தம்!

பெண்கள் இல்லையென்றால் நமக்கெல்லாம் எத்தப்பா தாய் மடி?

பெண்மை இல்லையென்றால் உலகத்தில் உயிர்கள் எப்படி உற்பத்தி ஆகும்?

பெண்கள் இல்லையென்றால் நம் கண்ணீர் துடைக்க யார் வருவார்கள்?

பெண்கள் இல்லாத இடத்தில் ஏதடா அன்பு?

பெண்மை இல்லையென்றால்
எங்கு போகும் நம்பிக்கை?

மொத்தத்தில் பெண்கள் இல்லாத உலகம் ஆண்களின் நரகத்திற்கான தொடக்கம்.

வீர வாட்களால் அழகிய பூக்களை
வெட்டிவிடாதீர்கள்.மனிதா!பெண்மையை போற்று,உன் பூட்டிய இதயத்தை உடைத்தெரி...!

சரவண பிரகாஷ்.

எழுதியவர் : சரவண பிரகாஷ் (25-Apr-17, 9:29 am)
பார்வை : 1384

சிறந்த கட்டுரைகள்

மேலே