உணவளிப்பவன் நிலையைக் காப்போம்

உணவளிப்பவன் நிலையைக் காப்போம்
நேற்று உணவில்லை
இன்று உடையில்லை
நாளை.... நாளை ...
நமக்கெல்லாம் உயிரில்லை
இன்றோ நமக்கொரு நாதியில்லை
நம் விவசாயிகளோ தலை நகர வீதியில
சிந்தித்துப்பாருங்கள் .....

நமக்கே இந்த கதி என்றால்
நம் சந்ததிகளுக்கு
தமிழின உழைக்கும் வர்க்கமே
ஒன்று படு உன் குரல் ஓங்கட்டும்
நாம் ஒன்று பட்டால்
பல கோடி உயிர்களை காப்போம்
ஊருக்கெல்லாம் சோறு போடுவோம் ...
ஆனால் ....
இன்றோ நம் விவசாயிகள்
நாளை நாம் பெறப்போகும் நிலையை உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள் ...

நேற்று உணவை இழந்தோம்
இன்று உடையை இழந்தோம்
நாளை நாம் உணர்வை இழக்காமல்
நாம் உறைவிட உலகை காத்து
பல கோடி உயிர்களை காக்க
ஒன்றுபட்டு ஒரே மனதை ஓங்கிநிற்ப்போம் ..
நாம் விவசாயம் நாம் போராட்டம் ..
விரைவோம் விளை நிலம் காப்போம் ....
கி .புஷ்பம்

எழுதியவர் : கி.புஷ்பம் (25-Apr-17, 1:10 pm)
சேர்த்தது : முனைவர்கிபுஷ்பம்
பார்வை : 115

மேலே