பூத்திடும் நாளை

ஆனந்தக் களிப்பு !

வானத்தில் வெள்ளிவெ ளிச்சம் - வர
. வாட்டந்தொ லைந்திடும் நீங்கிடு மச்சம் !
மோனத்து யில்களு மோடும் - மனம்
. மொத்தஞ்சி லிர்த்தொரு பல்லவி பாடும் !
ஈனக்கு ளிர்பனி ஏகும் - உடல்
. ஈட்டியைப் போலுறும் ! சோம்பலுஞ் சாகும் !
ஞானக்கு ளத்திடை நாளும் - விழ
. ஞாலத்தி லுள்ளது யர்களும் மாளும் !

காலைவெ ளிச்சத்தில் உள்ளே - பல
. கண்ணிய நுண்ணுயிர் சென்றிடும் பிள்ளே !
மேலவை செய்திடுஞ் ஜாலம் - தனில்
. மேனியெ ழில்பெறும் தேறிடுங் கோலம் !
வேலையில் வேகமும் வாய்க்கும் - அது
. வென்றிடும் நேரத்த டைகளை மாய்க்கும் !
சீலமும் நெஞ்சிடைத் துள்ளும் - வளிச்
. சீற்றமு ளத்திலு முள்ளத்துங் கொள்ளும் !

ஓடிவி ரைந்திடு வாயே - பக
. லோடிக்க ளைத்தநீ தூங்கிடு வாயே !
ஏடியென் சின்னக்கு ழந்தாய் - உனக்
. கென்னென்ன வேண்டும தெங்குங்கி டைக்கும்
வாடிவ தங்குத லின்றி - எழில்
. வட்டவி ழிக்குளி மூடுக வொன்றி !
தேடித்து ளிர்த்திடுங் காலை - அது
. தேவையெல் லாந்தரும் பூத்திடும் நாளை !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (26-Apr-17, 12:10 am)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 67

மேலே