கோடை மழை

வாய்க்கால் என்பது வரப்பாய் மாற ;
குட்டையும் குளங்களும் வறட்சியில் ஏங்க ;
ஏரிகளும் ஏக்கங்களில் பார்க்க ;
கடல் நீரோ ஆவியாய் போகுதே !

வியர்வையின் தாக்கம் மரங்களையும் வாட்டுதே ;
சட்டையை கழட்டுவதுபோல் பட்டையை உரிக்கிறதே ;
தாகத்தால் வாய்பிளந்த வயல்கள் -
அனல் காற்றில் ஆவி பறக்குதே !

கண்ணீரும் வருவதில்லை ;
கவலையில் நான் இருந்தும் !
ஈரப்பசை இல்லாமல் -
இறைஞ்சுகிறேன் இரு கை ஏந்தி !

கோடை மழையே வந்துவிடு !
கோபத்தையும் குறைத்துவிட்டு !
பாவமான எங்களுக்கும் -
பரிவையும் காட்டிவிட்டு !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (26-Apr-17, 10:19 am)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
Tanglish : kodai mazhai
பார்வை : 640

மேலே