ராணுவவீரனின் காதல் கடிதம்

தன் மனைவியை பிரிந்து வாழும் ராணுவவீரனின் காதல் கடிதம்..

என் அன்பே,
வானம் எனும் குடைக்கு கீழ் தான் இருவரும் உலாவுகிறோம்.

ஆனால், சிறிய இடைவெளி நமக்குள்.

பூமி எனும் கம்பளத்தின் மேல் தான் இருவரும் வலம் வருகிறோம்.

ஆனால், சிறிய இடைவெளி நமக்குள்.

சூரியனின் ஒளியில் மிளிருகிறோம்.

ஆனால்,சிறிய இடைவெளி நமக்குள்.

நிலவின் ஒளியில் குளிர்கிறோம்.

ஆனால்,சிறிய இடைவெளி நமக்குள்.

இங்கே பனிக்காலம் அங்கே வெயில்காலம்.

உன் பிரிவை நினைத்தால் எனக்கு இங்கு வெயில்காலம்.

என் காதலை நினைத்துக்கொள் அங்கே உனக்கும் பனிக்காலம்.

இவ்வளவு இடைவெளிகளும் நம் உடல்களுக்கு தான்.நம் உயிருக்கு அல்ல.
இருவரின் உயிர்கள் என்று பன்மையாய் கூறவில்லை என்று யோசிக்காதே.ஈருடல் ஓருயிர் என்று எப்போதோ ஆகிவிட்டோம்.

"உடல் மண்ணிற்கு
உயிர் நாட்டிற்கு"
இது ஒவ்வொரு ராணுவவீரனின் மந்திரம்.

உனக்கு யாரும் கூறாத மந்திரத்தை கூறுகிறேன்.
ஒவ்வொரு ராணுவவீரனுக்கும் ஈருயிர்.
ஒன்று-நாட்டிற்கு
மற்றொன்று-மனைவிக்கு
உனக்கு கொடுத்த உயிர் அது என்றும் நிரந்திரமானது.
நான் இருந்தாலும் இறந்தாலும்
உன்னுடனே,உன்னுள் பயணிப்பேன்
என்றும் துணைவனாய்
அன்பு கனவனாக...
-உன்னுள் மகிழ்வாய் உன் அன்பு கனவன்
(நம் நாட்டிற்காக பாடுபடும் ஒவ்வொரு ராணுவவீரனுக்கும் அவர்தம் மனைவிக்கும் இதை சமர்ப்பிக்கிறேன்)

எழுதியவர் : ஷாகிரா பானு (26-Apr-17, 10:55 am)
பார்வை : 1075

மேலே