வாயில்லா ஜீவன்களுக்கு அவை வாழ ஒரு மனு

தலை கீழாக தொங்கவிடப்பட்டு
மேல் நோக்கிய கால்கள் கட்டப்பட்டு
இரு சக்கர வண்டியில் இருபுறமும்
தொங்கவிடப்பட்டு ஊர்வலம்போல்
எடுத்து செல்கிறார்கள் பாவம்
அந்த சேவல் கோழிகளை


அங்கு நோக்கின்
ஒரு ஆட்டு மந்தையை
அந்த ஆடுகள் ஈன
குரல் கொண்டு கத்த கத்த
ஒட்டி செல்கிறார் ஒருவர்


அந்த சேவல் கோழிகளுக்கும் தெரியும்
அந்த மந்தை ஆடுகளுக்கும் தெரியும்
அவை எங்கே போகின்றன என்று
போகும் அந்த இடம் பிடிப்பிக்கவில்லை
பேசமுடியாத அந்த பிராணிகள்
தங்கள் முயற்சியை விடவில்லை
சேவலும் ஆடுகளும்
எம்மை விட்டுவிடுங்கள் என்று
முறை இட்டும் கெட்டப்பார் இல்லை
அப்படியே யாராவது வந்தால்
அவைகளை தொட்டுப்பார்த்து
எத்தனை மாமிசம் தேறும் என்று
பார்த்து செல்கிறார்கள்

இதோ அவைகள் சென்றடைந்தன
அந்த 'கசாப்பு' களத்திற்கு
கதற கதற வெட்டப்படுகின்றன
அவற்றின் 'கருணை மனுவை'
யாரும் ஏற்கவில்லை
இந்த வையகத்தில் மனிதன்
மனிதனைக் கொன்றால்
அது கொலை; பஞ்ச மஹா பாதகம்
மனித நீதியில் கொலை செய்தவனுக்கு
மரண தண்டனை ; ஆனால்
பேசத் தெரியாத ஜீவன்களை
தினம் தினம் மனிதன் வதைக்கிறான்
தன உணவிற்காக ..........ஆனால் அது
கொலையாகவில்லை ................ஐயா
மனிதன் கொலைகளை விசாரிக்கும்
நீதிபத்திகளும் தான் இந்த
கொலை செய்யப்பட்ட ஜீவராசிகளின்
மாமிசத்தை விரும்பி சாப்பிடுகிறார்
இது என்ன நியாயம்
யோசித்து பாருங்கள்
பகுத்தறிவாளர்கள் சொல்லலாம்
கொல்லாமல் விட்டுவிட்டால்
இந்த ஜீவராசிகளின் எண்ணிக்கை
கட்டுக் கடங்காமல் போகலாம் என்று
ஆகவே அவற்றை அடித்து உண்ணலாம் என்று

ஐயா......மனிதனின் எண்ணிக்கை
பலகோடிபெருகி போயிருக்க
குறைத்திடுவோம் எண்ணிக்கையை என்று
கொலை செய்வாரா ? அது பெருங் குற்றம்

ஈனக்குரலில் என்னை கொல்லாதே
என்று நம்மில் தஞ்சமடைந்த ஜீவா ராசிகளை
நாம் காக்க தவறினால் அது
குற்றம் ஆகாதா .......................

இதற்க்கு பதில் யார் கூறுவார்
வாயில்லா ஜீவா ராசிகளுக்கு
நீதி மன்றங்கள் இல்லை
வாதாட வழக்கறிஞர்கள் இல்லை
கேட்க நீதிபதிகள் இல்லை
இறைவா இவற்றிற்கும் பிறப்பு தந்த நீ
ஒரு நாள் நீதி தரவேண்டும்
இந்த நல்ல ஜீவன்களுக்கு
இது வரை இரக்கம் இருந்தும்
ஒன்றும் செய்யமுடியா நிலையில் நான்,
என்னால் கண்ணீர் ஒன்று தான்
அவற்றின் கருணைக் கோரி சிந்த முடியும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Apr-17, 2:43 pm)
பார்வை : 51

மேலே