ராமு-சோமு----------உரையாடல்- போது தேர்தல் பற்றி

ராமு : ஏண்டா சோமு, இந்த ஒட்டு' தேர்தல், ஓட்டுரிமை
இவற்றைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்

சோமு : ஐயா நீங்க திடீர்னு இதை பத்தி கேட்டா ஏதோ
பாதிப்பு இருக்கன்னு தான் அர்த்தம் ......
சொல்லுங்கய்யா என் இப்படி கேட்டுடீங்க .....

ராமு : அந்த காலத்துல ஒட்டு கேக்க வருவாங்க தேர்தலின் போது
தாங்கள் நாட்டுக்காக, மாகாணத்துக்காக என்னெல்லாம்
செய்துள்ளார், இன்னும் என்ன செய்வதாய் சித்தம் இவற்றை
சொல்லிவிட்டு ஒட்டு கேட்பார்கள்.........இப்போதெல்லாம்
ஏதேதோ சொல்லி திரிகிறார்கள் ...........தட்டிக்கேட்க ஆட்கள்
இல்லை என்று ............
சோமு : ஆமாங்க ஐயா ; தட்டி கேட்டால் தட்டி விடுவார்களே என்று
பயம் .....................அதான் பாதி பேர் ஓட்ட போடுவதில்லை...
பணத்தை வேறு திணித்துப்புட்டு வோட்டு போடுறோமா இல்லையா
என்று கொம்பேறி முக்கண் போல் பார்க்கிறார்கள் ..............
இது ஒரு வெட்கக்கேடுங்க ஐயா ..................

ராமு : இதுக்கெல்லாம் தீர்வு உண்டா என்ன நெனைக்கற ..............

சோமு : ஐயா இருக்குதுங்க ..................சின்ன வயது ஆய கத
ஞாபத்துக்கு வருதுங்க ................ ஒன்று பட்டால் உண்டு
வாழ்வு................. நாம ஜனக ஒற்றுமையாய் ஒன்று சேர்ந்து
அநீதியை எதிர்க்கணுமுங்க ......நாம் உண்மையை நாடனும்
ஒரு போதும் கயவர்களுக்கு தலை சாய்க்க கூடாதுங்க .
லஞ்சம் வாங்க கூடாது, குடுக்க கூடாதுங்க..............இப்படி
இருக்க பழகினா ...............அநீதி தானா ஓடி போய்டுங்க ......
தேர்தலும் இப்படி தானுங்க..............


ராமு : பிரமாதம் போ உன் பகுத்தறிவு.....................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Apr-17, 3:42 pm)
பார்வை : 152

மேலே