கனவுல காதல் கனவுல

கனவுல காதல் கனவுல
மறந்தேன் ஒலகத்த
நானும்
மறந்தேன் ஒலகத்த
கண்ண கட்டி
காட்டுல விட்டது போல
காதல கட்டி நாட்டுக்குள்ள திரியறோம் நாங்க
காதலே தேம்புது போங்க எங்க
காதல பாத்து
கவிதையே தேம்புது போங்க
எங்க காதல பாத்து
வானத்த வில்லா வளைப்போம்
மணலுல கயிற திரிப்போம்
ஆனா நாங்க
ஆனா
காதலுல சொதப்புவோம் போங்க
காதலுல சொதப்புவோம் போங்க
பட்டாம்பூச்சி பறந்தா
அவ ஞாபகந்தான்
மயிலு
ரெக்க கட்டி பறந்தா
அவ ஞாபகந்தான்
இதயம் துடிக்க காத்து வேனும்
யார் சொன்னது
இதயம் துடிக்க
காதல்தான் வேணும்
இது நான் சொன்னது
அவ பல்லிளிச்சா பாட்டு வரும்
கண்ணடிச்சா கவித வரும்
ஓரப்பார்வை பாத்துபுட்டா
அய்யயோ ஜன்னி வரும்
பிச்ச கேக்க கூடாது
பிச்ச கேக்க கூடாது
இந்த விதி
காதலுக்கு சத்தியமா பொருந்தாது
வேண்டாண்டா மச்சின்னு சொன்னாலும்
காதல் வந்த ஜென்மம் அது திருந்தாது
சத்தியமா அது திருந்தாது
சாராயம் குடிச்சாதான் போதை
அவ பத்தாலே
ஏறுண்டா போதை
நீச்சல் தெரியாத பயன் கூட
கடலுல விழுந்துபுட்டா நீந்தி வர வாய்ப்பிருக்கு
காதலுல விழுந்துபுட்டா கரையேறதான் வாய்ப்பிருக்கா?
மறந்தேன் ஒலகத்த
கனவுல காதல் கனவுல
நானும்
மறந்தேன் ஒலகத்த
கனவுல காதல் கனவுல
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.ஓம் 8056156496

எழுதியவர் : - அன்புடன் R.P.ஓம் 8056156496 (27-Apr-17, 4:04 pm)
சேர்த்தது : RPஓம் 8056156496
பார்வை : 153

மேலே