பிராண சகி

பிராண சகி
===========

அடியே அன்பு குந்தானி, நீ எப்படி இருக்கிறாய் ம்ம்

இன்னும்
நீ எனக்கு எழுதும் எல்லாக் கடிதங்களில்,
என் விரல்களால்,
உன் சிகைப் புணர்ந்த
மருதாணி சீகக்காய் வாசனையையும்,
அந்த மயில் பீலி
கொண்டையுள்ள,
உன் பேனா மை வாசனையையும் தான் ஒர்க்கிறேன்

உனக்கு நினைவிருக்கும்,
அன்று நம் முதலிரவு,
உன் வீட்டில்,
எனக்கு எந்த அறையும்,
அவ்வளவு பரிட்சயமில்லைதான்,
நீ இருக்கும் அறைக்குள்,
தாமதித்தே வந்து சேர்ந்தேன்,

உனக்குத் தெரியும்,
நான் மறதிக் காரன் என்று,
அந்த இரவு,
உனக்குகொடுக்கவென்றே
ஒரு மோதிரம் வாங்கியிருந்தேன்,
அறைக்குள் வந்துவிட்டு,
அதை வைத்த இடம் தெரியாமல் தேடுகிறேன்,
நீயும் ஏதுமறியாதே முழிக்கிறாய்,
அதுவா இதுவா என,
ஒவ்வொரு பொருளாய்
பெயர் சொல்லிக்கொண்டு வருகிறாய்
கடைசியாய்,
நீ சொல்லித்தான் தெரியும்,
அது இருந்த இடம்,

அடுத்தமுறை மறக்கும் முன்பு ,
இதை உன் விரலில் கோர்த்துவிடுகிறேனே என்றேன்,
நன்றி கூறி,
பற்கள் தெரியாதே சிரித்தவன்போல் ம்ம்,
நீயும் சிரித்தாய்,
அப்போது, நான் அழகாய் இருப்பதாய்ச்சொன்னாய்,
உன் மோதிர விரலோடு,
எல்லா விரல்களையும் நீட்டிக்கொடுத்தாய்,
அதிகம் வெட்கப்பட்டாய்,
அழகாகியிருந்தாய்,

அடுத்து நான் கேட்டேன்,
எப்போது வெட்கப்பட்டு முடிப்பாய் என,
முறுவலித்துக்கொண்டே
மோவாய் அசைத்தவள்,
ஏன் என்றாய்,
நீ முடிக்கும் இடத்திலிருந்து ,
நான் வெட்கப்படப்போகிறேன் என்றேன்,
ச்சீ என்றாய்,

பொட்டிட மறந்த உன் முன் நெற்றியில்,
பவள பொட்டுபோல்,
பதக்கம் விழுந்திருந்தது,
ஆடை ஏதும் அகற்றாமல்,
அனுமதியின்றி எழுந்து நடந்து,
உப்பரிகை மாடம் வரை போகலாமா என்றாய்,
அந்த செய்கையும்,
அந்த பாணியும், பிடித்திருந்தது,
அங்கு போனதும்,
சுவரோடு சாய்ந்து நின்றாய்,
பாதி நிசி காற்றுத் தழுகி,
உன் பட்டாடை விலகி இருந்தது,

அற்பம் நடக்கலாமா என்றாய், அதே அனுமதியின்றி,
வெளியிடையில்,
தளிர் மரங்கள் இளகி,
சருகுதிர்ந்து,
உன் கைகளில் பட்டப்போது
உன் கண்ணாடி வளையல்கள், சிணுங்கின,

பொற்றாமரைப் படவில்,
அக்கரைக்கடந்து,
பூஞ்சோலைப்பார்க்கலாமா என்றாய்,
அதே அனுமதியின்றி ம்ம்,
பூஞ்சோலைப்படர்வில்,
உன் பாதச்சரம் பட்டதும் ,
பூக்களெல்லாம், சிரித்துக் குலுங்கின,

பாலொளி சந்திரிகையில்,
உன் மந்தகாசம் கண்டு நின்றபோது ,
தாமதமின்றி அணைக்கலாமா என்றது,
என் மெய்சிலிர்த்த, குளிர் ம்ம்,

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (28-Apr-17, 4:21 am)
Tanglish : piraana sagi
பார்வை : 107

மேலே