ஒரு நாட்டுப்புற பாடல்

ஆன் : ஆத்தங்கரை மேட்டினிலே
ஒத்தையடி பாதையிலே
ஒத்தையா போற பெண்ணே
கொஞ்சம் நில்லு
அத்த மவன் நான் இங்கிருக்க
இப்படி நீ உச்சி வெய்யல் வேளையிலே
நீ தனியே போகலாமா சொல்லு கண்ணு


பெண் : உச்சி வெய்யல் வந்திடுச்சு மாமோய்
வயக்காட்டுல உழுதுபுட்டு கஞ்சிக்கா
அப்பாரு காதிர்ப்பாரு பாவம்
அவருக்குத்தான் கூழ் கஞ்சி
ஏனம் ஏத்திக்கிட்டு போறேன் மச்சான்
நம்ம ஊரு இது நான் பிறந்த ஊரு
எனக்கு இங்க என்ன பயம் மச்சான்
நீயே சொல்லு ..................

ஆண் அப்படி சொல்லாதே கண்ணு
காலமெல்லாம் இப்போ மாறிப்போச்சு
நாடும் கெட்டு போச்சு
குள்ளநரி கூட்டங்க மோப்பம் பிடிச்சு
பெண்களுக்கு தொல்லை கொடுக்க
இங்கும் அங்கும் அலையுது
அதனால தனியா போக்கதே கண்ணு
மச்சான் நான் துணையா வாரேன்
காத்தவராயன் போல உந்தன்
காவல் தெய்வமாய் ரெண்டு பேரும்
சேர்ந்து போவோம் காத்திரு கண்ணு



பெண் : நீ இதனை சொன்ன பாடு
கிறுக்கி எனக்கு நாட்டு நலவரம்
இப்போ கொஞ்சம் மண்டையில் ஏறிச்சு
மச்சான் இப்போ எனக்கு தனியே போக
மனமும் இல்ல பயம் கொஞ்சம் வந்திடுச்சு
வந்திடுவாய் மச்சான் விரைவில் வந்திடுவாய்
காலனிக்கு சேர்ந்தே போவோம் இப்போது
நீ தான் எனக்கு காவல் தெய்வம்
என் காத்தவராயன்

ஆண் : இனி பயம் ஏதுக்கடி உனக்கு கண்ணே
மச்சான் நான் உன் பக்கம் வந்துவிட்டேன்
சேர்ந்தே போவோம் களனி மேட்டுக்கு
என் மாமனை பார்க்க அப்பா அவனிடம்
நாலு வார்த்தை நான் பேச

பெண் : அப்படி என்ன பேச்சு என் அப்பாவோடு
பேச உனக்கு இப்பவே சொல்லு மச்சான்
என்கிட்டே நீ ஒன்னும் மறக்காம

ஆண் : அது ஒன்னும் இல்ல கண்ணு
இந்த ஆவணியில் ஒண்ணா நான்
கண்ணாலம் செஞ்சுக்கலாமுன்னு இருக்கேன்
ஒங்க ஆத்தா இதுக்கு சம்மதம் சொல்லியாச்சு
ஒன அப்பாவும் இதுக்கு சம்மதிச்சா
காலம் பூராவும் ஒனக்கு நான் துணையா
இருப்பேன் நல்ல கணவனா கண்ணு

பெண் : எனக்கென்ன கவலை மச்சான் இனி
நீ இருக்கையிலே வா வா சீக்கிரம்
இனி நான் தஹியா எங்கும் போமாட்டேன்


(பின் குறிப்பு : ஆஸ்திரேலியாவில் இருக்கும் எனக்கு இப்படி ஒரு
கற்பனை தோன்றியது நாட்டுப்புற பாடல் எழுத )


:

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Apr-17, 1:51 pm)
பார்வை : 101

மேலே