நட்பு

நானும் அவனும் இணைபிரியா தோழர்கள்
பள்ளிப் பருவத்தில் ஒரே பள்ளியில் படித்தோம்
ஒரே வகுப்பில் ; பள்ளி விட்டப் பின்
வீடு சென்று காய் காக் கழுவி
சிற்றுண்டி சாப்பிட்டு
விளையாட மைதானம் வந்து
நொண்டி,சடுகுடு, கோலி ஆடினோம்
இப்படியே செல்கயில் ஒரு நாள்
எங்கள் பள்ளி வாழ்க்கை முடிய
என் தந்தைக்கு பணி மாற்றம்
வேறு நகரம் சென்றோம்
இணை பிரியா நண்பர்கள்
நாங்கள் பிரிந்தோம்
எங்கள் நட்பு பிரியவில்லை
மனதிலே பதிந்தது

காலம் சுழன்றது
இதோ என் நண்பனை
அமெரிக்காவில் பார்க்கிறேன்
முப்பது வருடங்களுக்கு பிறகு
மீண்டும் எங்கள் நட்பு உயிர்பெற்றது
கோலியாடிய பருவம் நினைவுக்கு வந்தது
நெகிழ்ந்தோம்
வயதினிலே இப்போது நாங்கள்
சிறுவர்கள் இல்லைதான்
ஆனால் எங்கள் நட்பு
அதே இளமையில் மீண்டும்
ஊஞ்சல் ஆடுகிறது
அந்த ஊஞ்சலில் நாங்களும்
ஆடிக் கொண்டிருக்கிறோம்
இது மாறா நட்பு
ஆண்டவன் தந்த பிணைப்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Apr-17, 3:34 pm)
Tanglish : natpu
பார்வை : 480

மேலே