காதல் ஒரு ராஜ யோகம்

காதல் ஒரு ராஜ யோகம்
****************************************

ராதாகிருஷ்ணன் என்பது ஜீவாத்மா பரமாத்மா ஐக்யம்

இப்படித்தான் ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனோடு ஐக்கியம் ஆக வேண்டும்

அதற்கு நவவித பக்திகளில் ஏதேனும் ஒன்றை செய்து வந்தால் ஆன்மா புறப்பொருளிலிருந்து பிரிந்து இந்த பசு அந்த பதியிடம் நம் ஆன்மா என்னும் ராதை ஜீவாத்மா என்னும் கிருஷ்ணனின் பாதங்களில் சரணா கதி அடைவாள்

நவவித பக்தி
********************************************
ஸ்ரவணம் – இறைவனின் புகழை கேட்பது;


கீர்த்தனம் – இறைவனின் புகழை பாடுவது;


ஸ்மரணம் – இறைவனின் புகழை நினைப்பது, அசை போடுவது;


பாத சேவனம் – இறைவனின் திருவடிகளில் அடைக்கலம்;

அர்ச்சனம் – இறைவனின் புகழை துதிப்பது;


வந்தனம் – இறைவனின் திருவடியை வணங்குவது;


தாஸ்யம் – இறைவனை காதல் செய்வது அவனுக்கு தொண்டு புரிவது;


சாக்கியம் – இறைவனோடும் அவனை எண்ணும் அடியார்களோடும் நட்புடன் இருப்பது;

ஆத்ம நிவேதனம் – எது நடந்தாலும் என் ஆருயி நாயகனே நீயே எல்லாம் என்று இறைவனின் திருவடிகளில் பரிபூரண சரணாகதி.

***************************************************************************************


இப்படிப்பட்ட ஆன்மாவின் தெய்விக இயல்பால்தான் ஒவ்வொரு ஜீவனும் இன்னொரு ஜீவன்பால் காதல் செய்கின்றன


புரியாதவர்கள் தேகத்தை மட்டுமே சம்மந்தப்படுத்தி சொல்வார்கள்


அதனால்தான் ஒரு ஆண் ஒருபெண்ணுக்கு காதல் தொல்லை தருகிறான் ஒரு பெண் ஒரு ஆணுக்கு காதல் தொல்லை தருகிறாள்


காதல் வசப்படாமல் காம வசப்பட்டுமே ஆண் பெண் ஈர்ப்பு இருந்தால் அது பிரிவுக்கு வழி வகுக்கிறது இல்லை என்றால் சண்டை சச்சரவுக்கு வழி செய்கிறது


ஆதலால் எல்லோரும் காதல் செய்யுங்கள்
வாழ்வே ஒரு யோகம்தான்
காதலோ ராஜ யோகம்தான்
நமது கர்ம வினைகளால் சமூக அந்தஸ்தின் ஏற்றத்தாழ்வுகளால் இது இன்று கேலிக்குரியதாக சித்தரிக்கப்படுகிறது

உண்மையான அன்பையும் உண்மையான காதலையும் புரிந்துகொள்ள பல இதயங்களுக்கு பக்குவம் இல்லை

வெறுமனே எந்திர வாழ்க்கையை வாழாதிர்கள்
எலோரிடமும் எல்லா ஜீவன்களிடமும் காதல் செய்தால் அந்த காதல் அன்பாக மலர்ந்துவிடும்


அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் ஆர்.பி.ஓம் 8056156496

எழுதியவர் : - அன்புடன் ஆர்.பி.ஓம் 8056156496 (28-Apr-17, 5:17 pm)
சேர்த்தது : RPஓம் 8056156496
பார்வை : 291

சிறந்த கட்டுரைகள்

மேலே