நண்பனும்-நட்பும்

நண்பன் அவன் விதி வசத்தால்
மாறி அவன் நண்பனுக்கு தீது
நினைக்கினும் அந் நண்பனை
கைவிட்டு விடமாட்டான் இவன்
அவன் செய்யும் தீமையை நன்மையாய்
பாவித்து ஏற்பான் அவன் பாவத்தை
இவனே சுமக்கவும் தயங்கான்
நட்பின் சிகரமாம் இந் நண்பன்
இகழ்வாராய்த் தாங்கும் நிலம் போல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Apr-17, 5:53 pm)
பார்வை : 657

மேலே