ஒரு மொழி சொல்வாயோ

கள்ளமிலா கண்களென் மனதினைக்
கொள்ளை யடித்துச் சென்றது
தேவதை யவளின் தேனிதழோ
தேன் சுரந்திடும் ,அத்தேனை
சுவைத்திடவே தேனினம் சூழ்ந்திடும்
செந்தாமரை மலர்கூட வஞ்சம்
கொள்ளு மவளழகினை கண்டே
நிலமிசை மிதந்தடும் பொன்னி
நதியவள் ;கொஞ்சு தமிழவள்
கதிர் மிஞ்சு பொலிவினள்
நெஞசு நிறைந் தனள்
தீமை யஞ்சு தனலவள்
கண்ணங் குழியிலே எங்காதல்
நிறைத்த தேன் தென்றல்
வஞ்சி சிரிப்பினில் நெஞ்சு
பறித்தாள் ;குழலோ நான்
மயங்கிடும் கார் முகில்
கொஞ்சி பேசி மனதினை
பிரித்துச் சென்றயெந் தலைவியே
உன் மனதினைத் தந்தால்
உயிரோடு உன்னருகே இருப்பேன் அன்பே!!..

எழுதியவர் : தீனா பகத் (28-Apr-17, 6:14 pm)
சேர்த்தது : Bagath
பார்வை : 68

மேலே