கால்சட்டை

அப்பா, அப்பா என நவீன் அப்பாவை எழுப்பினான்.அதிகாலை 4.30 மணி
இருள் சூழ்ந்த வேளை அந்த சின்ன உள்ளம் ஆழ்ந்து உறங்க வேண்டிய நேரம் இது ஆனால் சூழ்நிலை அவன்
உழைக்க வேண்டிய கட்டாயம்.அப்பாவோ என்னாடா என கேட்டுவிட்டு மீண்டும் ஆழ்ந்து குரட்டை விட பால்காரர் ஹாரன் சத்தம் வேற உடனே நவீன் எழுந்து சென்று மாட்டின் முன் நிற்க பால்கார்  பசுமாட்டில் கறவை முடித்தார்.பின்பு வேகமாக வந்து முகத்தை கமுவிகொண்டு சைக்கிளில் போய் பேப்பர் கட்டுகளுடன் சென்றான் மாதம் ஆயிரம் ரூபாய் வருமானம் பத்து வயதில் .அவனுடைய சைக்கிள் கூட காலையில் மட்டும் தான் சொந்தம் அது முதலாளிக்குசொந்தமானது. அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவண் தினம் நடந்து பள்ளிக்கு சென்றுவந்தான் தன் நண்பர்களுடன் விளையாட்டாக..
ஏழ்மையின் கரணமாக சிறிய வீட்டில் அப்பா அம்மா அக்காவுடன்
வாழ்ந்து வந்தான் .அக்காவின் படிப்பு
செலவுக்கு தன் உண்டியல் சேமிப்பையும் உழைப்பையும் கொடுத்தான்.படிப்பு முடிந்த கையோடு
அவன் அக்காவுக்கு திருமணம் அதற்க்கு கூட அவன் சேமிப்பை கொடுத்தான்.
சிறிய வயதில் நிறைய தெரிந்த முகங்கள் அவன் பேப்பர் போடுவதால்..
திருமணம் முடிந்தது அவள் அக்காவும் மாப்பிள்ளை வீட்டுக்கு
சென்றாள்..
அவன் வருத்தமாக அமர்ந்திருந்தான்
வாழ்க்கையில் கீழிந்த கால் சட்டையில் எவ்வளவு நாள் உழைப்பது அதை விட்டால் அரசாங்க பள்ளி சீருடை அதே உடை அவனுக்கு அலுப்பு தர புதுமையான சட்டை வாங்க சென்றான் தன் நண்பர்களுடன் ..
அப்பா தினம் குடிப்பதால் அவனே கடைக்கு சென்றான்.விலை கேட்டவன் மிரண்டான் விலை ரூ800..
சில கடைக்கு ஏரி இறங்க அவனிடம்
அந்த அளவு காசு இல்லை.
சரி அடுத்த மாத சம்பளம் வரட்டும் என நினைத்தான்.தான் எடுத்து வந்த 100ரூபாயில் 50 ரூபாய் மட்டும் செலவு செய்தான் தன் நண்பர்களுக்கு பாப்கான் வாங்கி கொடுக்க எல்லோருக்கும் சந்தோஷம் அவர்களுடைய நீண்ட நாள் ஆசை அது.எல்லோருக்குமே உடையில் வறுமை தெரிய நடந்தார்கள்.கால் சட்டை கனவு அடுத்த மாதம் தள்ளி போக அடுத்த மாதம் அக்காவுக்கு ஆடி வரிசை வந்தது .
சாலையில் அவன் நிறைய பணக்கார பசங்களுடைய உடையும் அவர்களுடைய வாழ்க்கை தரத்தை பார்த்தான்..
கனவு கண்டான் ஆனால் கானல் நீரானது கால்சட்டை..
அம்மா சொன்னால் அக்காவுக்கு இன்னும் சில மாதத்தில குழந்தை பிறக்க போவுது உங்க முதலாளிகிட்ட அட்வான்ஸ் கேட்டுவை என்றாள்.சரிமா என்றான் கடுமையான சேமிப்பு கொண்டான்..
ஆண் குழந்தை பிறக்க மீண்டும் சேமிப்பு கரைந்தது.
அவன் கடைக்கு சென்று புதிய சட்டை வாங்கி தன் அக்காவீட்டுக்கு சென்று அந்த குழந்தையிடம் நீட்ட புது கால் சட்டை அக்கா என்னாலதான் புது சட்டை போட முடியல இவன நாம விட்டரகூடாது என்றான்.அவனுடைய நண்பர்கள் குழந்தைகளாக சிரிக்க
அக்கா,மாமா,அம்மா,குடிகார அப்பா
இவர்கள் கண்களில் கண்ணீர்..
அப்பா இவணை கட்டி அணைத்து டேய் நான் இனிமே இந்த குடியை விட்டு விட்டு உனக்காக வாழ்வேன் டா..என்றார்..
நவீன் சொன்னான் பரவா இல்லபா
நீ குடிய விட்டுவிட்டு எனக்கு ஒரு சட்ட எடுத்துதா என கூற கட்டிபிடித்து அனைவரும் அழ...

அந்த கால்சட்டை குடும்பத்திற்க்கே
உழைத்தது
அது தனக்கு ஒருகால்சட்டை வேண்டி பொருட்படுத்தாமல் பிறர்க்காக வாழ்ந்த மனது எவ்வளவோ பெரிது என
அக்கா மாமா கண்களில் கண்ணீர்....

எழுதியவர் : சிவசக்தி (28-Apr-17, 7:02 pm)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : kaalsattai
பார்வை : 276

மேலே