பாகு காச்சி பலி குடுக்கறதா

ஏண்டப்பா முத்து பசங்கெல்லாம் என்னமோ 'பாகு பலி, பாகு பலி' -ன்னு அடிக்கடி பேசிட்டு இருந்தாங்க.
😊😊😊😊😊😊😊
ஆமாம் பாட்டிம்மா நானும் அவுங்ககூடத்தான் இருந்தேன். ஏதுக்கு 'பாகுபலி' -பத்திக் கேட்டீங்க.
😊😊😊😊😊😊
இல்லடா முத்து, நான் நல்லா இருக்கற வரைக்கும் பதநீரக் காச்சி பாகு பதம் வந்ததும் மண்ணுல ஒரு.
சாண் அகலம் அரை அடி ஆழம் குழி தோண்டி அதுல கொட்டமுத்து (ஆமணக்கு) எலையைப் பரப்பி அதுல காச்சின பாக ஊத்தி வைப்பேன். ரண்டு மணி நேரத்தில அந்தப் பாகு இறுகி கெட்டியாகிடும். அதத்தாம் பன வெல்லம்னு சொல்லுவாங்க. ஒரு வெல்லம் ரண்டு கிலோ எடை இருக்கும். அது மாதிரி பாகக் காச்சி எதாவது சாமிக்கு படைக்கறதயா பசங்கெல்லாம் 'பாகு பலி' -ன்னு சொல்லறீங்க?
😊😊😊😊😊
இல்லங்க பாட்டிம்மா. 'பாகு பலி இல்ல. 'பாகுபலி'- அது பிரமாண்டமான சினிமாப் படம் பாட்டிம்மா. 480 கோடி செலவில தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி -இந்த நாலு மொழிலயும் எடுத்திருக்கறாங்க. மொதல் நாள் வசூலே 70 கோடியாம்.
😊😊😊😊😊
பாகுபலி சினிமா படமா? நா என்னத்தக் கண்டேன். சாமிக்கு ஆட்டை வெட்டி பலி குடுக்கற மாதிரி பாகு காச்சி சாமிக்கு படைக்கறதுன்னு நெனச்சிட்டேன்.

எழுதியவர் : மலர் (29-Apr-17, 1:13 am)
பார்வை : 220

மேலே